twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜபக்சே அரசின் தூதரான ஆசினுக்குத் தடை விதிக்க வேண்டும்-மீனவர்கள்

    By Sudha
    |

    Asin
    ராஜபக்சே அரசின் தூதராக செயல்படும் நடிகை ஆசின், நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்டோருக்கு தமிழ் திரையுலகம் தடை விதிக்க வேண்டும் என மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

    தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் கபடி மாறன், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் மகேஷ், தென்னிந்திய மீனவர் பேரவைத் தலைவர் ஜெயபாலன் ஆகியோர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,

    தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டித்து தமிழக மீனவர்களுக்காக பேசிய ஒரு காரணத்திற்காக கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

    மீனவர் செல்லப்பன் கொலையை நியாயப்படுத்திய தென்னிந்திய கடலோர கடலோரக் காவல்படை கமாண்டர் ராஜசேகரை கண்டிக்கிறோம். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் இந்திய கடற்படையை கண்டிக்கிறோம்.

    மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதை கண்டித்து இலங்கை திரைப்பட விழாவிற்கு தடை விதித்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    ராஜபக்சே அரசின் விளம்பர தூதர்களாக செயல்படும் நடிகை ஆசின், விவேக் ஓபராய் மற்றும் இந்திய படவிழாவில் பங்கேற்ற திரைப்படங்களுக்கு திரைப்பட சங்கங்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தடை விதிக்க வேண்டும் என்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X