»   »  சூர்யாவின் 24 டீசர்.. மீம்ஸ் போட்டு "கொண்டாடும்" குசும்பர்கள்!

சூர்யாவின் 24 டீசர்.. மீம்ஸ் போட்டு "கொண்டாடும்" குசும்பர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 4 ம் தேதி வெளியான சூர்யாவின் 24 டீசர் இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ட்ரெண்டடித்து வருகிறது.

இந்நிலையில் சூர்யாவின் டீசரைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசென்கள் வழக்கம் போல தங்கள் மீம்ஸ் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர்.

அவற்றில் இருந்து ஒருசில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

வாழ்க்கை ஒரு வட்டம்டா

'வாழ்க்கை ஒரு வட்டம்டா' பிதாமகன் படத்தில் லைலா சூர்யாவிடம் வாட்ச் கேட்டு அழுவதை சுட்டிக் காட்டியிருக்கிறார் அண்ணாமலை.

சூர்யாவ உரசாதீங்க

இது சூர்யா உரசாதீங்க என்று தளபதி படத்தில் மம்முட்டி பேசும் வசனத்தைப் பயன்படுத்தி ரசிகர்கள் பதிலடி கொத்து வருகின்றனர்.

டீயா இல்ல காப்பியா

டீயா இல்ல காப்பியா என்ன ஆத்துறார் என்று சூர்யாவின் பெயரை கலாய்க்கச் செய்திருக்கிறார் ஹன்டர்.

கொம்பன் பத்திரம்

கொம்பன் வீட்டில் பத்திரமாக இருக்கவும் என்று கார்த்தியை அலெர்ட் செய்திருக்கிறார் மோக்கியா.

இந்த தடவ

இந்த தடவ மிஸ் ஆகாது என்று சூர்யா ரசிகர்கள் நம்பிக்கை காட்டுகின்றனர்.

நாங்களும்

நாங்களும் வாட்ச தேடித்தான் வந்தோம் என்று கூறுகிறார் பிரசாந்த்.

நம்ம ஹீரோ

நம்ம ஹீரோல்லாம் எப்ப இப்படி நடிக்கப் போறாங்க என்று மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் கேட்பது போன்று ட்வீட்டியுள்ளனர்.

திரும்பத்திரும்ப

டீசர் மூலம் சூர்யா மீண்டு வந்திருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார் ஆத்ரேயா.

இதைப்போல சூர்யா ரசிகர்கள் தம்ஸ்அப் காட்ட, நெட்டிசென்கள் வழக்கம் போல கலாய்க்க, தொடர்ந்து இணையத்தில் ட்ரெண்டடித்து வருகிறது 24 டீசர்.

English summary
Surya's 24 Teaser Related Memes.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil