நடிகர் விஜயகுமாரை தாக்கியதாக மகள் வனிதாவின் கணவர் கைது!

By Sudha

Vanitha Vijayakumar
சென்னை: நடிகர் விஜயகுமாரை தாக்கி கையை உடைத்ததாக, அவருடைய மகள் வனிதாவின் கணவர் ஆனந்தராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதைத் தொடர்ந்து தன்னையும் கைது செய்யுமாறு பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் வனிதா விஜயகுமார் அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏர்பட்டது.

பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள், வனிதா. இவர் சந்திரலேகா, மாணிக்கம் உள்பட படங்களில் நடித்துள்ளார். ஏற்கெனவே நடிகர் ஆகாஷை திருமணம் செய்து விவாகரத்தான வனிதா, இப்போது ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருவரும் வசிக்கின்றனர். சொந்தமாக விளம்பரம் நிறுவனம் ஒன்றை அவர்கள் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், நடிகர் விஜயகுமார் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் கடந்த 15-ந்தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், "தீபாவளிக்காக எனது மகள் வனிதா 3 பேரக் குழந்தைகளையும் எங்கள் வீட்டில் விட்டுச்சென்றார். தீபாவளி முடிந்ததும் வனிதா தனது கணவர் ஆனந்தராஜுடன் குழந்தைகளை அழைத்துச் செல்ல வீட்டிற்கு வந்து இருந்தார். 2 குழந்தைகள் அவர்களுடன் செல்ல விரும்பினார்கள். ஒரு குழந்தை அவர்களுடன் போக விரும்பவில்லை.

அதனால் அந்த குழந்தையை நாங்கள் கொடுக்கவில்லை. உடனே எனது மகளுடன் வந்த ஆனந்தராஜ் என்னை தகாத வார்த்தைகளை கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். எனது கையை முறுக்கி கீழே தள்ளியதால் இடது கை மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டது. அதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். ஆனந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகிறேன்...'' என்று கூறியிருந்தார்.

ஆனந்தராஜ் கைது:

அந்த புகாரின் பேரில், மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் விசாரணை நடத்தினார். கொலை மிரட்டல், தாக்கி காயம் ஏற்படுத்துதல், தகாத வார்த்தைகளை கூறி திட்டுதல் ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ் ஆனந்தராஜ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று ஆனந்தராஜை போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

மாஜிஸ்திரேட்டு ராமநாதன் அவரை 15 நாள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டனர். அதன்படி ஆனந்தராஜ் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

வனிதா விஜயகுமார் அழுது ஆர்ப்பாட்டம்!

முன்னதாக, பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் நடிகை வனிதா கணவருடன் தன்னையும் கைது செய்யும்படி சத்தம் போட்டு அழுதார். அங்கு கூடிய நிருபர்களுடன், "கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது பிள்ளைகளை அப்பா விஜயகுமார் வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். அதன்பின் எங்களது பிள்ளைகளை அழைத்து வர நானும் எனது கணவரும் சென்றபோது, அப்பா விஜயகுமார், அருண் விஜய் ஆகியோர் பிள்ளைகளை கொடுக்க முடியாது என்று கூறி ஒரு அறையில் பூட்டி வைத்து விட்டனர். பின்னர் அவர்கள் என்னை சரமாரியாக அடித்தார்கள். இதில் எனக்கு உடலில் காயம் ஏற்பட்டது. உடனே எனது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு மதுரவாயல் போலீசாரிடம் புகார் அளித்தேன்.

பிள்ளைகளை போலீஸ் உதவியுடன்தான் மீட்டேன். ஆனால் என் புகாரின் மீது விஜயகுமார், அருண்விஜய் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், எனது கணவர் ஆனந்தராஜ் அப்பா விஜயகுமாரை தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, 15-ந் தேதி எனது கணவர் மீது மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் அப்பா புகார் கொடுத்து இருக்கிறார்.

இந்த புகாரை விசாரிக்க வந்த போலீசார், நான் வருவதற்குள் எனது கணவரை அவசர அவசரமாக பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டனர்.

புகாரில் என் பெயரும் இருப்பதால் என்னையும் கைது செய்யுங்கள் என்று கதறினேன். ஆனால், யாரும் கண்டு கொள்ளவில்லை. பின்னர் எனது கணவரை மட்டும் சிறையில் அடைத்து விட்டனர். இது சம்பந்தமாக போலீஸ் கமிஷனர் மற்றும் முதல்வரிடம் புகார் கொடுக்கவிருக்கிறேன்..,'' என்றார்.

நடிகை வனிதா கொடுத்த புகார் பேரிலும் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், விசாரணை முடிவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மதுரவாயில் போலீசார் தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X