மீண்டும் மேக்கப் போடும் விஜய்சாந்தி!

ஆந்திராவின் 3-வது பெரிய கட்சியாக இருப்பது தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி. இக்கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ், கட்சிக்காக டி.வி. சேனல் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளார். அதில் தெலுங்கானா மக்களின் கலாசார நடனங்கள், வாழ்க்கை முறை பற்றிய நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஒளிபரப்பவிருக்கிறார்களாம்.
இந்த டி.வி.யில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நடிகை விஜயசாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதில் ஸ்லிம்மாகத் தோற்றமளிக்க கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதன் மூலம் அவர் எடையை ஓரளவு குறைத்துள்ளார்.
மேலும் தற்போது தினமும் உடற்பயிற்சி மையம் சென்று பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். உணவுக் கட்டுப்பாட்டையும் கடை பிடித்து வருகிறார்.
மீண்டும் கவர்ச்சியான தோற்றத்துடன் தெலுங்கானா டிவியில் தோன்றி அந்த சேனலை பிரபலப்படுத்துவாராம். 'இதுவும் கட்சிப் பணிதான். மகிழ்ச்சியோடு அதைச் செய்யவிருக்கிறேன்' என்று விஜயசாந்தி அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











