»   »  3வது ஆண்டில் அடி எடுத்து வைத்த 24ஏஎம் ஸ்டுடியோஸ்!

3வது ஆண்டில் அடி எடுத்து வைத்த 24ஏஎம் ஸ்டுடியோஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 24ஏஎம் ஸ்டுடியோஸ் துவங்கி மூன்றாண்டுகள் ஆகியுள்ளது.

24ஏஎம் ஸ்டுடியோஸ் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படத்தை தான் முதன் முதலில் தயாரித்தது. அந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து மோகன் ராஜா சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள வேலைக்காரன் படத்தை தயாரித்துள்ளது 24ஏஎம் ஸ்டுடியோஸ்.

24AM Studios Enters Its Third Year!

நயன்தாரா, சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

24ஏஎம் ஸ்டுடியோஸின் மூன்றாவது தயாரிப்பான நிவின் பாலி-பிரபு ராதாகிருஷ்ணனின் பெயரிடப்படாத படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் சிவகார்த்திகேயனை வைத்து பொன்ராம் இயக்கி வரும் புதுப்படத்தையும் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. அந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.

வேலைக்காரன் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது. இந்நிலையில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் துவங்கி மூன்றாண்டுகள் ஆகியுள்ளது.

English summary
24AM Studios is in its successful third year of production. The first production of the banner, Remo starring Sivakarthikeyan and Keerthy Suresh in the lead roles, was a blockbuster hit.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil