twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகனா இருந்தாலும்.. தப்பு செஞ்சா தண்டனை தான்.. இந்தியனில் இருந்த மனுநீதி கதை #24YearsOfEpicIndian

    |

    சென்னை: ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஊழலுக்கு எதிரான சாட்டையடி படமாக வெளியான இந்தியன் படம் ரிலீசாகி இன்றுடன் 24 வருஷமானதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    Recommended Video

    எதிர் காலத்தை கனித்த உலகநாயகன் | Kamal Hassan, Vijay Sethupathi | Marudhanayagam

    ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, ஊர்மிளா, நெடுமுடி வேணு, கவுண்டமணி மற்றும் செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    ஊழலுக்கு எதிரான சுதந்திர போராட்ட கதையில் ஒரு அழகான மனுநீதி சோழன் கதையையும் இயக்குநர் ஷங்கர் கையாண்டு இருப்பார்.

    இந்துக்கடவுள்களை அவமதிக்கிறார்.. விஜய் சேதுபதி மீது இந்து மக்கள் முன்னணி சென்னை கமிஷனரிடம் புகார்!இந்துக்கடவுள்களை அவமதிக்கிறார்.. விஜய் சேதுபதி மீது இந்து மக்கள் முன்னணி சென்னை கமிஷனரிடம் புகார்!

    24 வருஷம்

    24 வருஷம்

    1996ம் ஆண்டு மே 9ம் தேதி திரைக்கு வந்த இந்தியன் படம் வெளியாகி இன்றுடன் 24 வருடங்களை கடந்திருப்பதை ரசிகர்கள் #24YearsOfEpicIndian என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். உலக நாயகன் கமல்ஹாசன் வயதான சேனாபதி மற்றும் சந்திர போஸ் எனும் சந்துரு என இரு கதாபாத்திரங்களில் கச்சிதமாக நடித்து அசத்தியிருப்பார்.

    ஊழல் ஒழிப்பு

    ஊழல் ஒழிப்பு

    அரசு இலாக்காக்களில் நடக்கும் ஊழல்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், ஊழல் அதிகாரிகளை ஒரு வயதான நபர் வர்ம கலையால் தாக்கி, கத்தியை எடுத்திக் குத்திக் கொள்ளும் கொடூரங்களையும், அதற்கு பின்னால் மறைந்திருக்கும் இரண்டு தனித் தனி பிளாஷ்பேக்குகளும் இந்தியன் படத்தின் இணையற்ற பலம்.

    மனுநீதி கதை

    மனுநீதி கதை

    மனுநீதி சோழன் எனும் அரசன், தனது மகன் செய்தது தவறு என்று தெரிந்ததும், தேர்க்காலில் இட்டு அவனை கொலை செய்து நீதியை நிலைநாட்டிய கதையை இந்தியன் படத்தில் அழகாக கையாண்டு இருப்பார் இயக்குநர் ஷங்கர். லஞ்சம் வாங்குபவர்களை கொலை செய்து வரும் சேனாபதி, தனது மகன் என்பதால், சந்துருவை விட்டு விடாமல் கிளைமேக்ஸில் அவனையும் கொள்வது தான் படத்தின் ஹைலைட்டே.

    வசூல் வேட்டை

    வசூல் வேட்டை

    1995ம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா படத்தின் வசூலை தாண்டி மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்தியன் படம். இந்தியன் தாத்தா கெட்டப் மற்றும், இரு விரல்களை மடக்கி சொருகும் வர்மக் கலையை இந்தியா முழுவதும் பலரும் வேடிக்கையாக செய்து பார்த்தது தனிக்கதை.

    சுத்தம் பண்ணல

    சுத்தம் பண்ணல

    இந்தியன் படத்தின் 24வது வருடத்தை முன்னிட்டு சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் இந்தியன் படம் குறித்த பதிவுகளை டிவிட்டரில் போட்டு வருகின்றனர். இந்தியன் படத்தின் அரிய போஸ்டர்களும் அதில் வைரலாகி வருகிறது. "சுதந்திரம் வாங்குனதுல இருந்தே இந்த இடத்தை யாரும் சுத்தம் பண்ணல" என்ற வாசகத்துடன் வெளியான இந்திய பட போஸ்டர் வைரலாகி வருகிறது.

    நேதாஜி குடும்பத்துடன்

    நேதாஜி குடும்பத்துடன்

    இந்தியன் படத்தின் சுதந்திர போராட்ட பிளாஷ்பேக்கில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆர்மியில் இணைந்து இந்திய சுதந்திர போராட்ட வீரராக நடித்திருப்பார் நடிகர் கமல்ஹாசன். ரியலிலும், நேதாஜியின் குடும்பத்துடன் அவரது இல்லத்தில் இருக்கும் கமல் புகைப்படத்தையும் ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

    ரஹ்மான் இசை

    ரஹ்மான் இசை

    இந்தியன் படத்திற்கு மற்றொரு பலமாக இருந்தது என்றால் அது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பிரமிக்க வைக்கும் இசை தான். "அக்கடாங்கு". "டெலிபோன் மணிபோல்", "பச்சைக் கிளிகள் தோளோடு", "கப்பலேறி போயாச்சு", "மாயா மச்சிந்திரா" என ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு தனித்துவமான இசையை வழங்கி ரசிகர்களை ஈர்த்திருப்பார்.

    இந்தியன் 2

    இந்தியன் 2

    மீண்டும் சேனாபதியின் வேட்டை தொடரும், எந்த அளவுக்கு வயது ஆகி இருக்கிறதோ அந்த அளவுக்கு புத்திக் கூர்மையுடன் இந்தியன் தாத்தா வரப் போகிறார் என இந்தியன் 2 பட போஸ்டர்களை சமீபத்தில் வெளியிட்டு, அதற்கான பணிகளை கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இருவரும் இணைந்து செய்து வருகின்றனர். இந்த லாக்டவுன் முடிந்த பிறகு இந்தியன் 2 பட வேலைகள் அசுர வேகமெடுக்கும் என லைகா அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னொரு தேசிய விருது வெயிட்டிங்!

    English summary
    Kamal Haasan and Shankar’s Epic movie Indian completed its 24 years of release. Kamal fans trending hashtag and posting Indian movie specials in socials.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X