twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாய்பாபா என்ற புண்ணியவானை இழந்துவிட்டோமே! - பழம்பெரும் நடிகைகள் கண்ணீர்

    By Shankar
    |

    P Suseela
    நகரி: ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று தன் வாழ்க்கை மூலம் காட்டிய மகான் சாய் பாபா. மனித நேயம் மிகுந்த மிகப்பெரிய புண்ணியவானை இந்த உலகம் இழந்து விட்டதே, என கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர் பிரபல நடிகைகள்.

    சாய்பாபாவின் தீவிர பக்தர்களான பாடகி சுசீலா, நடிகைகள் ஜமுனா, அஞ்சலிதேவி ஆகியோர் புட்டபர்த்தி ஆசிரமம் சென்று சாய்பாபா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    96 வயது வரை இருப்பார் என்று நினைத்தேனே...

    பின்னர் வெளியே கண்ணீருடன் வந்த பாடகி சுசீலா நிருபர்களிடம் கூறுகையில், "நான் சிறுவயதில் இருந்தே சாய்பாபாவின் தீவிர பக்தை. அவரிடம் நாம் என்ன வேண்டினாலும் கிடைக்கும். அவர் உலக மக்களிடம் அன்பை போதித்தார். மனிதர்களிடம் உள்ள போட்டி, பொறாமை, கவலை போன்ற தீய குணங்களை ஒழிப்பது பற்றி அதிகம் போதித்தார்.

    அவரது போதனைகளால் திருந்தியவர்கள் ஏராளம். அவரால் இந்தியா ஆன்மீகத்தில் அதிக வளர்ச்சி பெற்றுத் திகழ்கிறது. உலகில் எத்தனையோ பாபாக்கள் இருக்கலாம். எத்தனையோ சாமியார்கள் தோன்றலாம். ஆனால் அவர்களை எல்லாம் விட சாய்பாபா புனிதம் நிறைந்தவர்.

    ஏழைகளின் கஷ்டத்தில், துயரத்தில் பங்கு கொண்டவர். அவரைப்போல வேறு யாராலும் சமூக சேவை செய்திருக்க முடியாது. இந்த மகான் 96 வயது வரை இருப்பார் என்று மிகவும் எதிர்பார்த்தோம். ஆனால் இறைவன் பாபாவை வெகுசீக்கிரத்திலேயே எங்களிடம் இருந்து பிரித்து விட்டார். அவர் இந்த உலகை விட்டு பிரிந்தாலும் அவரது சேவைகள் தொடரும். அறக்கட்டளை நிர்வாகிகள் அந்த பணியை திறமையாக செயல்படுத்த வேண்டும்," என்றார்.

    ஏழை பணக்காரன் என்ற பேதம் பார்க்காத பாபா!

    நடிகை ஜமுனா கூறுகையில், "சாய்பாபாவின் கோடிக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருவர். அவரிடம் சென்று எனது எந்த கஷ்ட நஷ்டங்களை கூறினாலும் தீர்த்து வைப்பார். அவர் ஒருபோதும் ஏழை-பணக்காரன் என்ற வேறுபாடு பார்த்ததில்லை. அனைவருடனும் சமமாக பழகினார்.

    அவர் தொடங்கிய கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறை கிடையாது. அனைவரும் சமம் என்பதை வெளிப்படுத்துவதற்காக இந்த முறையைக் கொண்டு வந்தார்.

    அவரது அருளால் பலன் பெற்றவர்கள் ஏராளம். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் பாபா," என்றார்.

    மனிதநேயம் மிக்க மகா புண்ணியவான்!

    நடிகை அஞ்சலிதேவி கூறுகையில், "சாய் பாபாவுக்கு உடல்நலக் குறைவு என்பதை அறிந்ததுமே என்னைப் போன்ற பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தோம். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து பாபாவை காப்பாற்றி விடுவார்கள் என்று நினைத்தோம். அவர் உயிர் பிழைத்து பக்தர்களுக்கு மீண்டும் தரிசனம் தருவார் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தோம்.

    அவர் இறந்து விட்டார் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. அவர் தனது தாய் சொல்லை தட்டாதவர். அவரது தாய் சொல்படி இந்தியாவை விட்டு எந்த நாட்டுக்கும் செல்லவில்லை. நம்நாட்டில் இருந்து கொண்டே சேவை செய்தார்.

    அவர் தனது வாழ்நாளில் உகாண்டா நாட்டுக்கு மட்டுமே சென்றுள்ளார். சாய்பாபா ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவை செய்தார். நாடு முழுவதிலும் உள்ள ஏழை-எளிய மக்கள் பயன்பெற பல்வேறு திட்டங்களை தீட்டி திறம்பட செயல்படுத்தினார். அவரது இழப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    மனித நேயம் மிகுந்த மிகப்பெரிய புண்ணியவானை இந்த உலகம் இழந்து விட்டது," என்றார்.

    மக்கள் சேவையே இறைவனின் சேவை என்பதை உணர்த்தியவர்...

    நடிகரும் காங்கிரஸ் பிரமுகருமான சிரஞ்சீவி கூறுகையில், "மக்களுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு ஆற்றும் தொண்டு என்பதை தன் வாழ்க்கை மூலம் உணர்த்திய மகான் சாய்பாபா. அவரது இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. அவர் அவதரித்த இந்த பூமி புண்ணியம் செய்திருக்கிறது," என்றார்.

    சாய்பாபாவுக்கு பக்தர்கள் அஞ்சலி-படங்கள்

    English summary
    Veteran actors and actresses of South India expressed their grief over the death of Sri Satya Sai Baba today. Singer Suseela, veteran actresses Anjali Devi, Jamuna Rani and actor Chiranjeevi condoled the death of Baba.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X