அல்லு அர்ஜுனை இயக்கும் செல்வராகவன்!

ஆயிரத்தில் ஒருவன் முடிந்த கையோடு அவர் டகுபதி ராணாவுடன் இணைந்து ஒரு தெலுங்கு சரித்திரப் படம் இயக்குவதாக பிரமாண்டமாய் பிரஸ் மீட் வைத்து அறிவித்தார். ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் அந்த புராஜெக் கிடப்பில் போடப்பட்டது.
அடுத்து விக்ரமுடன் படம் பண்ணுவதாகவும், லெஹ் உள்ளிட்ட காஷ்மீர் பகுதியில் ஷூட்டிங் என்றும் அறிவித்தார்.
ஆனால் அதுவும் புஸ்ஸாகிவிட்டது. இப்போது தம்பி தனுஷுடன் இணைந்து இரண்டாம் உலகம் படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். 75 சதவீத படம் முடிந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் கமல்ஹாஸனுடன் இணைந்து படம் பண்ணுகிறார் என செய்திகள் வந்துள்ளன. இதனை செல்வராகவனும் சமீபத்தில் உறுதிப்படுத்தினார்.
இதற்கு அடுத்த படத்தையும் இப்போது கமிட் செய்துள்ளார் செல்வா. தெலுங்கு முன்னணி ஹீரோ அல்லு அர்ஜூனை வைத்து இந்தப் படத்தை இயக்கப் போகிறாராம்.
ரூ 50 கோடி பட்ஜெட். முன்னணி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் பட வேலைகள் கமல் படம் முடிந்த பிறகு தொடங்குமாம்.
சரீ... கமல் படம் எப்போது துவங்கும் செல்வா?


Click it and Unblock the Notifications











