எந்திரன் கதை என்னுடையது! - கிளம்பியது இன்னொரு புகார்

By Chakra

எனது சிறுகதையின் அடிப்படையில் உருவானதுதான் எந்திரன் என தமிழ் எழுத்தாளர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியாகி உலகெங்கும் வசூலைக் குவித்துள்ள படம் எந்திரன்.

இந்தப் படத்தின் கதை என்னுடையது என பலரும் படம் வெளியாகும் முன்பு வரை சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் படம் வெளியான பிறகு அவர்கள் அமைதியாகிவிட்டனர்.

இப்போது ஆர் தமிழ்நாடன் என்பவர், எந்திரன் படத்தை என்னுடைய கதையின் அடிப்படையில் எடுத்துவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனரிடம் அவர் அளித்துள்ள புகாரில், "1996-ம் ஆண்டு நான் எழுதிய ஒரு சிறுகதையின் மையக் கருவை அடிப்படையாக வைத்து எந்திரன் படத்தை உருவாக்கியுள்ளனர்.

எந்திரன் படத்தின் கதைக்கான காப்புரிமை எனக்கே சொந்தம். என்னிடமோ, இந்தக் கதை வெளியான பத்திரிகை வெளியீட்டாளரிடமோ அனுமதி பெறாமல் எந்திரனுக்கு ஷங்கர் பயன்படுத்தியுள்ளார். இது மோசடியான செயல். இயக்குநர் ஷங்கர், சன் பிக்சர்ஸ் நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறன் ஆகியோர் கூட்டுச் சதி செய்துள்ளனர். இந்தக் கதையை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் படமாக வெளியிட்டு எனது காப்புரிமையை சட்டத்திற்கு விரோதமாக உரிமை மீறல் செய்துள்ளனர்.

இது கிரிமினல் குற்றமாகும். எனவே இயக்குநர் ஷங்கர் மற்றும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

எந்திரன் படத்தின் கதை ஷங்கர் உருவாக்கியது. பின்னர் எழுத்தாளர் சுஜாதாவின் துணையுடன் அந்தக் கதை செப்பனிடப்பட்டு எந்திரன் திரைக்கதையாக உருவானது.

இந்தக் கதை ஒரிஜினலானது, எந்தப் படம் அல்லது கதையின் பாதிப்பிலும் உருவானதல்ல என்று எழுத்தாளர் சுஜாதா கூறியிருந்தார். சமீபத்தில் இந்தப் படத்தின் கதை என்னுடையது என்று ஒரு கன்னட எழுத்தாளர் சொன்னபோது, சுஜாதாவின் இதே பதிலை ஷங்கரும் கூறியது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X