முன்ஜாமீன் மறுப்பு: சிரஞ்சீவி மருமகன் ஹைதராபாத்தை விட்டு ஓட்டம்!!

By Shankar

Chiranjeevi
ஹைதராபாத்- ஆந்திர நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்ததால் நடிகர் சிரஞ்சீவியின் மருமகன் ஸ்ரீரிஷ் ஹைதராபாத் நகரைவிட்டு ஓட்டம் பிடித்தார்.

நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா. இவர் கடந்த 2007-ம் ஆண்டு என்ஜினீயர் ஸ்ரீரிஷ் பரத்வாஜை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீஜா ஹைதராபாத் போலீசில் கணவர் ஸ்ரீரிஷ் பரத்வாஜ், மாமியார் சத்யமங்களா, மாமனார் ஆகியோர் ரூ.1 1/2 கோடி வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் 3 பேரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் 3 பேரும் நாம்பள்ளியில் உள்ள 8-வது மெட்ரோபாலிடன் செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி, ஸ்ரீரிஷ் பரத்வாஜுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.

மாமியார் சுத்யமங்களா மற்றும் மாமனாருக்கு மட்டும் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். முன்ஜாமீன் மறுக்கப் பட்டதால் ஸ்ரீரிஷ் பரத்வாஜ் ஹைதராபாத்திலிருந்து வேறு ஊருக்கு தப்பி சென்று தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

அவரை ஆந்திர மாநில போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X