»   »  இசையமைப்பாளர்கள் சங்க பொன்விழா: மார்ச் 5-ந் தேதி பிரமாண்ட நிகழ்ச்சி!

இசையமைப்பாளர்கள் சங்க பொன்விழா: மார்ச் 5-ந் தேதி பிரமாண்ட நிகழ்ச்சி!

By Shankar
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா, சென்னையில் அடுத்த மாதம் (மார்ச்) 5-ந் தேதி நடக்கிறது.

இதுபற்றி சங்கத்தின் தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் சங்கரன், பொருளாளர் ராஜா ஆகிய மூவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள்.

அவர்கள் கூறுகையில், "திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சி மார்ச் 5-ந் தேதி காலை 10-30 மணிக்கு தொடங்கி, இரவு 11 மணிவரை நடக்கிறது.

விழாவில் 50 இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்-பாடகிகள், 250 இசைக்கலைஞர்கள், டைரக்டர்கள், நடிகர்-நடிகைகள் கலந்துகொள்வார்கள். நட்சத்திர கலைநிகழ்ச்சிகளுடன், இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.

எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா முதல் ஜீ.வி.பிரகாஷ்குமார் வரை அனைத்து இசையமைப்பாளர்களும் அந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

எம்.கே.டி.தியாகராஜபாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் போன்ற மூத்த நடிகர்களின் பாடல்களுடன் இன்றைய நடிகர்களின் பாடல்களும் பாடப்படும். டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா போன்ற மூத்த பாடகர்-பாடகிகள் முதல் இளைய தலைமுறை பாடகர்-பாடகிகளும் கலந்துகொள்கிறார்கள்.

இதையொட்டி 7 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடம் இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும்,'' என்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The cine musicians association golden jubilee celebration will be held on March 5th in Chennai. According to the association office bearers, there is a big star night arranged for this event.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more