நிபந்தனை ஜாமீனில் இயக்குநர் சீமான் விடுதலை!

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நெல்லை போலீசார் அவரைக் கைது செய்ததை சென்னை உயர்நீதிமன்றமும் சமீபத்தில் ரத்து செய்தது நினைவிருக்கும்.
இதைத் தொடர்ந்து, நீதிமன்ற நடைமுறைகள் முடிந்த பிறகு நாளை அல்லது நாளை மறுநாள் காலை சீமான் விடுதலையாகி வெளியில் வருகிறார்.
முன்னதாக புதுச்சேரி வழக்கில் ஜாமீன் கேட்டு புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி கிருஷ்ணாராஜாவிடம் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் இயக்குநர் சீமான்.
நேற்று அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கிருஷ்ணாராஜா, ரூ.10 ஆயிரத்திற்கு 2 பேர் சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டும் என்றும், வெளியில் சென்று சாட்சிகளைக் கலைக்கவோ, அச்சுறுத்துவோ கூடாது என்றும் சீமானுக்கு உத்தரவிட்டார்.
Comments
அரசியல் இலங்கை பிரச்சினை சினிமா சீமான் தமிழ்நாடு தேசிய பாதுகாப்பு சட்டம் விடுதலை cinema nsa release seemam srilankan tamils tamilnadu


Click it and Unblock the Notifications