இன்று வெள்ளிக்கிழமை... என்னென்ன புதுப்படங்கள் ரிலீஸ்?

By Shankar

சென்னை: இன்று வெள்ளிக்கிழமை... வழக்கம்போல, விசேஷ நாட்களைவிட அதிகப் படங்கள் இந்த வெள்ளியன்றும் வெளியாகின்றன.

நான்கு நேரடி தமிழ்ப் படங்களும், சில பிற மொழிப் படங்களும் இன்று வெளியாகின்றன.

வாயை மூடிப் பேசவும்

வாயை மூடிப் பேசவும்

இன்றைய வெளியீட்டில் மிகவும் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாகக் கருதப்படுவது வாயை மூடிப் பேசவும் படம். மம்முட்டி மகனின் முதல் தமிழ்ப் படம். நஸ்ரியா அவருக்கு ஜோடி. காதலில் சொதப்புவது எப்படி படம் தந்த பாலாஜி மோகன் இயக்கியுள்ளார்.

என்னமோ ஏதோ

என்னமோ ஏதோ

இது கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக் - ராகுல் ப்ரீத் சிங் - நிகிஷா பட்டீல் நடித்துள்ள படம் இது. ரவி தியாகராஜன் இயக்கியுள்ளார். ரவிபிரசாத் லேப் நிறுவனம் தயாரித்துள்ள முதல் படம் இது.

போங்கடி நீங்களும் உங்க காதலும்

போங்கடி நீங்களும் உங்க காதலும்

இந்தப் படத்தை நடிகர் ராம்கிருஷ்ணன் இயக்கியுள்ளார். மனம் கொத்திப் பறவையில் நடித்த ஆத்மியா நாயகியாக நடித்துள்ளார்.

என்னமோ நடக்கிறது

என்னமோ நடக்கிறது

விஜய் வசந்த் நாயகனாக நடித்துள்ள த்ரில்லர் படம் என்னமோ நடக்கிறது. ராஜபாண்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரபு போன்ற சீனியர் நடிகர்களும் நடித்துள்ளனர்.

பிற படங்கள்

பிற படங்கள்

காஞ்சி, சாம்ராட் அன்ட் கோ ஆகிய இரு இந்திப் படங்கள், ஒன் பை டு, ரிங் மாஸ்டர் ஆகிய மலையாளப் படங்கள், பிரிக் மேன்சன் என்ற ஆங்கிலப் படம் போன்றவையும் இன்று வெளியாகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X