twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சட்டப்படி குற்றம் படத்துக்கு தடையில்லை!!

    By Shankar
    |

    Sattappadi Kutram
    சட்டப்படி குற்றம் படத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 29-ம் தேதிக்கு ஒத்திப்போட்டது சென்னை உயர்நீதிமன்றம். படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் மறுத்துவிட்டது.

    சென்னையைச் சேர்ந்த ரபீக் என்பவர் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் தயாராகியுள்ள சட்டப்படி குற்றம் படத்தை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக இந்தப் படம் வருவதாகவும், மற்ற அரசியல் கட்சிகளைத் தாக்கி காட்சிகள் அமைந்துள்ளதாகவும் கூறி இந்தப் படத்துக்கு அவர் தடை கோரியிருந்தார்.

    ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் மார்ச் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இடைக்காலத் தடை எதையும் படத்துக்கு எதிராக விதிக்கவும் மறுத்துவிட்டார்.

    சத்யராஜ், சீமான் நடித்துள்ள இந்தப் படம் இன்று தமிழகமெங்கும் திரைக்கு வந்தது. விநியோகஸ்தர்கள் வாங்க மறுத்ததால் இந்தப் படத்தை எஸ் ஏ சந்திரசேகரன் சொந்தமாக ரிலீஸ் செய்துள்ளார்.

    English summary
    A writ petition has been made in the Madras High Court, by one J Rafique against the film Sattapadi Kuttram. The HC has ordered notice returnable by March 29, which means there is no ban on the release of the film on March 25.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X