சார்மி படத்துக்கு தடை!

நடிகர் அரவிந்த், நடிகை சார்மி ஆகியோர் நடித்த படம் லாடம்'. தரண் இசை அமைத்துள்ளார். பிரபு சாலமன் டைரக்டு செய்திருக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று முன்தினம் சென்னையில் நடந்த்து. இன்னும் சில தினங்களில் படம் வெளியாகவிருந்தது.
இந்நிலையில் சோழா கிரியேஷன்ஸ் சார்பில், பிரபல தயாரிப்பாளர் பொன்னுரங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
இந்த படத்தை நாங்கள்தான் முதலில் தயாரித்தோம். 50 சதவீதம் படம் எடுத்த பிறகு, இந்த படத்தை காஸ்மாஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் விலைக்கு வாங்கிக் கொண்டது. இதற்காக 26.5.2008 அன்று ஒப்பந்தமும் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தப்படி ரூ. 90 லட்சத்தை காஸ்மாஸ் நிறுவனம் எங்களுக்குத் தரவேண்டும். ஆனால், மொத்தம் ரூ. 40 லட்சம் மட்டுமே இதுவரை அந்த நிறுவனம் வழங்கியுள்ளது. மீதி ரூ. 50 லட்சத்தை இன்னும் தரவில்லை.
இந் நிலையில், இந்த படத்தை காஸ்மாஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. ஆகவே, எங்களுக்குப் பணம் தராமல் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் விசாரித்தார். இருதரப்பு விவரங்களையும் கேட்ட பிறகு இந்த படத்தை வெளியிட நீதிபதி இடைக்கால தடை விதித்தார். இதுபற்றி இன்னும் 2 வாரத்தில் பதில் தரும்படி காஸ்மாஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











