தனது வாரிசை நடிகராக்காதவர் ஜெய்சங்கர்! - கமிஷனர் ராஜேந்திரன்

By Sudha

வாழ்ந்த வரை பலருக்கும் உதவிகள் செய்து நல்ல மனிதர் என்று பெயரெடுத்தவர் மறைந்த நடிகர் ஜெய்சங்கர். அவரது மகன் விஜய்சங்கர் பிரபலமான கண் மருத்துவ நிபுணர். சென்னையில் பல இலவச கண் மருத்துவ முகாம்களை நடத்தியவர். இப்போது தந்தை ஜெய்சங்கர் பெயரில் ஒரு இணையதளத்தைத் துவங்கியுள்ளார்.

'ஜெய்சங்கர்.இன்' (www.jaishankar.in) என்ற முகவரியில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், நடிகர் கார்த்தி ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள விஜய்சங்கரின் மருத்துவமனையில் இந்த விழா நடந்தது.

இந்த விழாவில் பேசிய ஆணையர் ராஜேந்திரன், "தனது வாரிசையும் நடிகனாக்க முயற்சிக்காத அரிய கலைஞர் ஜெய்சங்கர். எத்தனையோ பேருக்கு வெளியில் தெரியாமல் உதவியவர். டாக்டர் விஜய்சங்கரும் நடிப்புத் துறைக்குப் போகாமல் அப்பாவின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த இணையதளம் அவரது சமூகப் பணிகளுக்கு உதவியாக இருக்கும்" என்றார்.

நடிகர் கார்த்தியும் பேசினார். டாக்டர் விஜய்சங்கர் நன்றி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X