மலேசியாவில் யுவன் 25 லைவ் கான்செர்ட் - ஜூலையில் அதிரப் போகும் கோலாலம்பூர்!

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் லைவ் கான்செர்ட் வரும் ஜூலை 16 -ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.

2 ஆண்டுகள் கோவிட் பெருந்தொற்று காலக்கட்டத்திற்குப் பிறகு மீண்டும் இப்படி ஒரு லைவ் கான்செர்ட் நடைபெறப்போவதை அறிந்து மலேசியத் தமிழர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

இத்தகவலை யுவன் நேற்று அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அறிவித்திருக்கிறார்.

கடல் கடந்து ரசிகர் கூட்டம்

கடல் கடந்து ரசிகர் கூட்டம்

கடல் கடந்து கோலிவுட் திரைப்படங்களையும், பாடல்களையும், நடிகர், நடிகைகளையும் ரசிக்கும் உலகத் தமிழர்களில் முதன்மையாக இருப்பவர்கள் மலேசியத் தமிழர்கள். எம்ஜிஆர், சிவாஜி காலம் தொட்டே உச்ச நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது, தமிழகத்தைப் போலவே திரையரங்குகளில் குவிந்து ஆராவாரத்துடன் கொண்டாட்டமாக ரசிப்பவர்கள் அவர்கள். அந்த வகையில் யுவன் சங்கர் ராஜா இசைக்கும் பாடல்களுக்கும் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் மலேசியாவில் உள்ளது.

2012-க்குப் பிறகு மீண்டும்

2012-க்குப் பிறகு மீண்டும்

வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்துவதில் மிகுந்த ஆர்வமுடையவர் யுவன் சங்கர் ராஜா. அந்த வகையில், 10 ஆண்டுகளுக்கு முன் 2012-ம் ஆண்டு, கோலாலம்பூரில் கேஎல்ஐஎம்எப் என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார். அந்நிகழ்ச்சி மலேசியத் தமிழர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பின்னர் மீண்டும் தற்போது யுவனின் 25 ஆண்டுகள் சினிமா பயணத்தைக் கொண்டாடும் வகையில், யுவன் 25 லைவ் கான்செர்ட் நடைபெறவிருக்கிறது.

சித் ஶ்ரீராம், பிரதீப் குமார்

சித் ஶ்ரீராம், பிரதீப் குமார்

யுவன் மட்டுமல்லாது ஜூலை மாதம் பாடகர் பிரதீப் குமாரின் இசை நிகழ்ச்சியும், ஆகஸ்ட் மாதம் பாடகர் சித் ஶ்ரீராமின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், யுவனின் நிகழ்ச்சியும் அறிவிக்கப்பட்டிருப்பதால் நிச்சயமாக மலேசிய ரசிகர்களின் காட்டில் இசை மழை என்று தான் சொல்ல வேண்டும். என்றாலும், இசை நிகழ்ச்சிகள் மிக நெருக்கமாக அடுத்தடுத்து நடக்கவிருப்பதால், எந்த நிகழ்ச்சிக்குச் செல்வது என்ற குழப்பம் ரசிகர்களுக்கு நேரிடலாம்.

வெள்ளி விழா யுவன்

வெள்ளி விழா யுவன்

சினிமாவில் இசையமைக்கத் தொடங்கி 25 ஆண்டுகளை எட்டியிருக்கிறார் யுவன். தனது வெள்ளி விழாவைக் கொண்டாடும் விதமாக கடந்த மார்ச் மாதம் துபாயில் இசை கச்சேரி நடத்தினார். மேலும், இந்த ஆண்டு யுவனுக்கு வரிசைக் கட்டி திரைப்படங்கள் வெளியாகக் காத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இயக்குநர் சீனு ராமசாமியின் மாமனிதன், செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் நானே வருவேன் ஆகியவை யுவனின் இசைக்காக மிகவும் எதிர்பார்கப்படும் திரைப்படங்களாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X