சிவாஜி, கமலை முந்தி உலக சாதனை படைக்கப் போகும் சீயான் விக்ரம்?

By Siva

சென்னை: விக்ரம் 54 படம் மூலம் சீயான் விக்ரம் உலக சாதனை படைக்கப் போகிறார்.

கடாரம் கொண்டான் படத்தை அடுத்து விக்ரம் இமைக்கா நொடிகள் படம் புகழ் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. அதனால் தற்போதைக்கு விக்ரம் 54 என்று அழைக்கப்படுகிறது.

விக்ரம் 54 படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

விக்ரம்

விக்ரம்

மெகா பட்ஜெட்டில் எடுக்கப்படும் அந்த படத்தில் விக்ரம் 25 வித்தியாசமான கெட்டப்புகளில் வரப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரின் கெட்டப்புகளை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று வடிவமைக்கிறதாம். இந்த தகவல் உண்மை எனில் உலகிலேயே ஒரு படத்தில் 25 லுக்குகளில் நடிக்கும் முதல் நடிகர் என்ற உலக சாதனை படைப்பார் விக்ரம்.

சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன்

முன்னதாக தசாவதாரம் படத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் 10 லுக்குகளில் வந்தார். மேலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நவராத்திரி படத்தில் 9 கெட்டப்புகளில் வந்து அசத்தினார். இந்நிலையில் விக்ரம் அவர்களின் சாதனைகளை முறியடிக்கப் போகிறார். விக்ரமின் கதாபாத்திரம் சவாலானது என்பதை தவிர வேறு எந்த விபரத்தையும் தெரிவிக்க அஜய் ஞானமுத்து தயாராக இல்லை.

சவால்

சவால்

விக்ரம் இதுவரை ஏற்ற கதாபாத்திரங்களிலேயே இது தான் மிகவும் சவாலானதாம். அப்படி என்ன சவாலான கதாபாத்திரம் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டுள்ளது. விக்ரம் 54 படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ப்ரியா பவானி சங்கர் விக்ரம் ஜோடியாக நடிக்க உள்ளார்.

இந்தியன் 2

இந்தியன் 2

ப்ரியா விக்ரம் படம் தவிர்த்து ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் கதாபாத்திரம் படம் முழுக்க வருமாம். இந்தியன் 2 படப்பிடிப்பு இந்த மாதம் ஹைதராபாத்தில் மீண்டும் துவங்க உள்ளது. கமல் ஹாஸன் தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்த வசதியாக படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: vikram விக்ரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X