மெகா டிவியின் அதிசய ராகம்!

தற்பொழுது தொலைகாட்சிச் சேனல்கள் பெருகிக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் ஒவ்வொரு சேனலும் தங்களுக்கென ஏதாவது ஒரு தனித் தன்மையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
அந்த வகையில் புதிதாக ஒளிபரப்பைத் தொடங்கியுள்ள மெகா டிவி தமது பார்வையாளர்களை அசத்தும் வகையில் அதிசய ராகம் என்னும் நிகழ்ச்சியினை வாரம் தோறும் சனிக்கிழமைகளில் இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பி வருகிறது.
இசையும், இனிமையும் சேர்ந்த அதிசய ராகம், தொடர்ந்து 13 வாரங்களை கடந்து இசைப் பிரியர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இனி வரும் வாரங்களில் புதுப் பொலிவுடன் ஜொலிக்க உள்ளது.
புதிய அரங்கத்தில், புதிய முறையில் மால்குடி சுபாவின் மயக்கும் இன்னிசை குரலில் தொகுத்து வழங்கப்படவிருக்குகம் இந்த நிகழ்ச்சியில், இசைத் துறையில் பிரபலமானவர்களைப் பற்றியும், இசை தவிர்த்த மற்ற விஷயங்களில் அவர்களுக்கு உள்ள ஆர்வங்களைப் பற்றியும், அவர்களின் உணர்வைத் தொட்ட, உள்ளம் கவர்ந்த பாடல்கள் பற்றியும் சுவாரசியமான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
இசையால் வசமான இதயங்களின் செவிகளுக்கு மட்டும் இன்றி விழிகளுக்கும், விருந்தளிக்கும் அதிசய ராகம் இசைப் பிரியர்களை மயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications











