இயக்குநர் களஞ்சியம் தலைமறைவு... போலீஸ் வலைவீச்சு

சினிமா எடுப்பதாக மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்துவிட்டதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் திருவண்ணாமலையைச் சேர்ந்த எல் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் மற்றொரு தயாரிப்பாளர் மற்றும் பிரபல இயக்குநரான மு களஞ்சியத்தையும் கைது செய்ய போலீசார் வலை வீசியுள்ளனர். ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.

பூமணி, கிழக்கும் மேற்கும் படங்களை இயக்கிய இயக்குநர் களஞ்சியம் என் கனவு நீதானடி என்ற புதிய படத்தை இயக்குவதாக இரு ஆண்டுகளுக்கு முன் அறிவித்தார். இதில் அவரே நாயகனாகவும், அஞ்சலி நாயகியாகவும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தைத் தயாரிக்க பங்குதாரர்களாக வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து அறிவிப்பு வெளியிட்டனர் களஞ்சியமும் சீனிவாசனும். இவர்களை நம்பி நிறைய பேர் ரூ.50000 முதல் ரூ.1 லட்சம் வரை செலுத்தி பங்குதாரர்களாகியுள்ளனர்.

ஆனால் சில தினங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தியவர்கள், பின்னர் படப்பிடிப்பு நடத்தவில்லையாம். விவரம் கேட்டால் எதுவும் சொல்ல மறுத்து வருகிறார்களாம். பணத்தைத் திருப்பிக் கேட்டவர்களுக்கு அதைத் தராமல் இழுத்தடிப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே பாதிக்கப்பட்டவர்கள் 15 பேர் இரு வாரங்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தனர். இந்த புகாரை விசாரித்ததில் ரூ.30 லட்சம் வரை சீனிவாசனும் களஞ்சியமும் மோசடி செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளதாம்.

இந்தப் புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் தயாரிப்பாளர் எல்.சீனுவாசனை கைது செய்து திருவண்ணாமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

சீனிவாசனின் பங்குதாரரான இயக்குனர் களஞ்சியம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். சீனிவாசன் கைதானது தெரிந்ததும் களஞ்சியம் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X