மம்முட்டி மகன் கல்யாணம்- தமிழ்த் திரையுலகினர், அரசியல்வாதிகள் வாழ்த்து

By Sudha

மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் திருமணம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் தமிழ்த் திரையுலகினர், அரசியல்வாதிகள் பெருமளவில் திரண்டு சென்று வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.

மம்முட்டிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு கல்யாணம் ஆகி விட்டது. மகன் துல்கார் சல்மானுக்கும், சென்னையைச் சேர்ந்த அமல்சுபையாவுக்கும் திருமணம் நிச்சயமானது. இதற்காக சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மம்முட்டி திருமண அழைப்பிதழைக் கொடுத்தார்.

துல்காரின் திரு்மணம் நேற்று சென்னை அடையாரில் நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பதட்டம் நிலவி வருவதால் திருமணம் நடந்த இடத்திற்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

திருமண விழாவில் தமிழ்த் திரையுலகினர் பெருமளவில் திரண்டு சென்று வாழ்த்து தெரிவித்தனர். பிரபு, ராதிகா உள்ளிட்டோர் திருமண விழாவில் கலந்து கொண்டனர். அதேபோல தமிழக அரசியல்வாதிகள் பலரும் கூட வந்திருந்தனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை கொச்சியில் வைத்துள்ளார் மம்முட்டி. அதில் மலையாளத் திரையுலகினர் கலந்து கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X