சீமான், அமீருக்கு ஜாமீன் நிபந்தனை தளர்வு

ராமேஸ்வரத்தில் நடந்த திரைத் துறையினரின் போராட்டத்தின் போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக கூறி இயக்குநர்கள் சீமானும், அமீரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்களை ராமநாதபுரம் கோர்ட் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.
அதன்படி இருவரும் மதுரையில் தங்கியிருந்து கையெழுத்துப் போட்டு வந்தனர். பேட்டி அளிக்கவும், வழக்கு குறித்து வெளியில் பேசவும் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தங்களது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று கோரி சீமானும், அமீரும் ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் மனு செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டது.
Comments


Click it and Unblock the Notifications