மூத்த பத்திரிகையாளர் ராதாராஜ் மரணம்!

20 ஆண்டுகளுக்கும் மேல் அரசியல் மற்றும் திரைப்பட செய்தியாளராக அனுபவம் பெற்றவர் ராதாராஜ். சொந்த ஊர் புதுக்கோட்டை.
வெரைட்டி சினிமாவின் ஆசிரியராகவும் இருந்தார். திரை உலக அதிசயங்கள் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். எம்ஜி வல்லபனின் பிலிமாலயாவில் செய்தி ஆசிரியாராகப் பணியாற்றினார். டி ராஜேந்தரின் உஷா பத்திரிகையிலும் பணிபுரிந்துள்ளார்.
சினிமா பத்திரிகையாளர் சங்கத்தை தோற்றுவித்ததில் முக்கிய பங்கு வகித்தவர் ராதாராஜ்.
ராதாராஜ் மரணத்துக்கு பல்வேறு திரையுலகப் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்றும் நாளையும் நடக்கவிருந்த பத்திரிகையாளர் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அவரது இல்லம் அமைந்துள்ள கேகே நகர் பாரதிதாசன் சாலையிலிருந்து மயானம் வரை இறுதி ஊர்வலம் நாளை மாலை நடக்கிறது. திரையுலக, பத்திரிகை பிரமுகர்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்கிறார்கள்.
மறைந்த ராதாராஜுக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











