போதைப் பொருள் விவகாரம்.. நடிகை ரியா சொன்ன 25 நடிகர், நடிகைகள் லிஸ்ட்.. கைது பீதியில் பிரபலங்கள்!

By

மும்பை: போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியா கொரோனா, 25 பிரபலங்களின் பெயரை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை ரியா சக்கரவர்த்தியின் சகோதரர் சோவிக், சாமுவேல் மிராண்டா உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நடிகை ரியா சக்கரவர்த்தியும் நேற்று செய்யப்பட்டார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரியா சக்கரவர்த்தி

ரியா சக்கரவர்த்தி

நடிகர் சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், நடிகை ரியா சக்கரவர்த்தி மீது பரபரப்பு புகார் அளித்தார்.

சி.பி.ஐ. விசாரணை

சி.பி.ஐ. விசாரணை

அவர்தான் சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டினார் என்றும், பணமோசடி செய்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து பாட்னா போலீசார் நடிகை ரியா சக்கரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். நடிகை ரியா மீது கூறப்பட்ட பண மோசடி மற்றும் பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை, விசாரணை நடத்தியது. இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ரியா மீது வழக்கு

ரியா மீது வழக்கு

பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்த போது ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் நடிகை ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

சோவிக் சக்கரவர்த்தி

சோவிக் சக்கரவர்த்தி

நடிகை ரியாவின் சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி, சுஷாந்த் வீட்டு மானேஜர் சாமுவேல் மிரண்டா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு இருவரையும் போதைப் பொருள் வழக்குக்காக கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். நடிகை ரியா சக்கரவர்த்தியிடம் போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், விசாரணை நடத்தினர். பின்னர் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

Sushant Singh Body guard First ever Interview • Rhea தான் காரணம்?
25 திரை பிரபலங்கள்

25 திரை பிரபலங்கள்

இந்நிலையில், போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகள் உள்பட 25 திரைபிரபலங்களின் பெயரை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் நடிகை ரியா தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட இருக்கிறது என்றும் இந்த வழக்கில் மேலும் பல சினிமா பிரபலங்கள் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X