சூர்யா 25 ஆண்டுகள் திரைப்பயணம்..மைனஸை பிளஸாக்கினார்..அண்ணனுக்கு சூப்பரா வாழ்த்து சொன்ன தம்பி!
சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா, திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐந்து நிமிஷத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ரணகளப்படுத்த முடியும்னா அது நம்ம சூர்யாவால் மட்டும்தான் முடியும்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் கடைசியில் ஐந்த நிமிஷம் வந்தாலும் சும்மா நச்சுனு, ரோலக்ஸ் சார்.. என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி மிரட்டி, ஒட்டுமொத்த அப்லாசையும் அள்ளிவிட்டார் சூர்யா.

நேருக்கு நேர்
இயக்குநர் வசந்த் இயக்கத்தில்,1997ம் ஆண்டு நேருக்கு நேர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில், விஜய், சூர்யா,சிம்ரன், கௌசல்யா ஆகியோர் நடித்திருந்தனர். தேவாவின் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டடித்து படத்திற்கு சுமாரான வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படம்
ஆரம்பத்தில் சறுக்கலை சந்தித்து விமர்சனத்திற்குள்ளான நடிகர் சூர்யா பின்பு படிப்படியாக முன்னேறி, ஃப்ரெண்ட்ஸ், நந்தா, காக்க காக்க, பிதாமகன், கஜினி, சில்லுனு ஒரு காதல், சிங்கம் என பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகர் என பெயர் எடுத்து தமிழ் சினிமாவில் கணிக்கப்படும் நடிகராக மாறிவிட்டார் நடிகர் சூர்யா.

தேசிய விருது
வித்தியசமான கதைக் களங்களை தேர்வு செய்து நடித்து வந்த சூர்யா, சூரரைப் போற்று படத்தில் ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை கதையை மையமாக வைத்து, ஒரு சாமானியனின் கனவை நிறைவேற்றும், மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசியவிருது கிடைத்துள்ளது. 2டி எண்டர்டெயின்மெண்ட் பேனரில் சூர்யா - ஜோதிகா ஜெய்பீம் திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

மைனஸை..பிளஸாக்கினார்
இந்நிலையில், சூர்யாவின் 25 ஆண்டுகள் திரைப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகர், கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரவும் பகலும் உழைத்து, தனது ஒவ்வொரு மைனஸையும் மிகப் பெரிய பிளஸ் ஆக்கினார். அவர் தனது சொந்த சாதனைகளை மிஞ்சுவதிலேயே குறிக்கோளாக இருந்தார். அவர் தனி மனிதராக இருந்து தனது தாராள மனதை பெரிதாக்கினார். ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைத்துள்ளார் என் சகோதரர் சூர்யா என நெகிழ்ச்சியுடன் அண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

25yearsofsuryaism
சூர்யா, தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். மேலும், சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #25yearsofsuryaism என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











