twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூர்யா கடந்து வந்த 25 ஆண்டுகள்..சாக்லெட் பாய் ரக்கட் பாய் ரோலக்ஸான கதை

    |

    தனக்கு முன் சினிமாவில் கால் பதித்தவர்களை தாண்டி உச்ச நிலையை அடைந்துள்ளார் சூர்யா. இதற்காக அவர் 25 ஆண்டுகள் கடின உழைப்பை செலுத்தியுள்ளார்.

    ஒரே ஆண்டில் ஆஸ்கர் அவார்டுக்கு அவரது படம் தேர்வானதும், ஆஸ்கர் அவார்டு குழுவுக்கு அழைக்கப்பட்டதும் சூர்யாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கிகாரம் எனலாம்.

    இந்த ஆண்டில் 68 வது திரைப்பட தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகர், சிறந்தப்படம் என அவருடைய சூரரைப்போற்றுப்படம் 5 தேசிய விருதுகளை கொத்தாக அள்ளியது அவரது 25 வது ஆண்டில் என்பது கூடுதலான விஷயம்.

    சூர்யா 25 ஆண்டுகள் திரைப்பயணம்..மைனஸை பிளஸாக்கினார்..அண்ணனுக்கு சூப்பரா வாழ்த்து சொன்ன தம்பி!சூர்யா 25 ஆண்டுகள் திரைப்பயணம்..மைனஸை பிளஸாக்கினார்..அண்ணனுக்கு சூப்பரா வாழ்த்து சொன்ன தம்பி!

     விடாமுயற்சி வெற்றிக்கு வழி..சூர்யா கற்ற பாடம்

    விடாமுயற்சி வெற்றிக்கு வழி..சூர்யா கற்ற பாடம்

    ஆங்கிலத்தில் பெர்செவெரென்ஸ் (perseverance) என்கிற வார்த்தை ஒன்று இருக்கும். அதற்கு சரியான உதாரணமாக நடிகர் சூர்யாவை சொல்லலாம். சராசரிக்கும் கீழான நிலையில் இருந்த இளைஞர், சினிமா நடிகரின் மகனாக இருந்தும் சினிமாவை அறியாத இளைஞர். சினிமாவுக்கான எந்த தகுதியும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமான இளைஞர். அவர் அறிமுகமான ஆண்டுகளில் முன்னணியில் இருந்த பல நடிகர்கள் இன்றும் பெரிய அளவில் பேசப்பட்டாலும், சிவாஜி, கமல்ஹாசன் வழியில் அவர்களையும் தாண்டி சில விஷயங்களில் சாதித்து நிமிர்ந்து நிற்கிறார் சூர்யா.

     விமர்சித்த ரஜினியே மனம் திறந்து பாராட்டு

    விமர்சித்த ரஜினியே மனம் திறந்து பாராட்டு

    இதற்கு அடிப்படை காரணம் சூர்யாவின் விடா முயற்சி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேடையில் நேரடியாக சரியான பெர்ஃபாமன்ஸ் இல்லை, பாடி லாங்குவேஜ் சரியில்லை என விமர்சனம் வைத்தார். ஆனால் சில ஆண்டுகளில் காக்க காக்க படத்தில் தனது பெர்ஃபாமன்ஸை உயர்த்தி காட்டி ஒரு ஐபிஎஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக "சூர்யாவின் காக்க காக்க படத்தை மாறு வேஷத்தில் சென்று ரசிகர்களுடன் பார்த்தேன், அவருடைய நடிப்பு பிரம்மிக்கத்தக்கதாக இருந்தது ஒவ்வொரு ஐபிஎஸ் ஆஃபிசரும் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவது போல் இருந்தது. சூர்யா இப்போது மிகச் சிறந்த அளவில் தூள் பண்ணுகிறார் வெரி நைஸ்" என்று பாராட்டினார். இந்த பாராட்டை பெற சூர்யா எடுத்த முயற்சி உழைத்த உழைப்பு சாதாரணமான ஒன்று அல்ல.

     பாதையை மாற்றிய பாலா..சாக்லெட் பாய் ரெக்கெட் பாயாக மாறிய தருணம்

    பாதையை மாற்றிய பாலா..சாக்லெட் பாய் ரெக்கெட் பாயாக மாறிய தருணம்

    2001 ஆம் ஆண்டு சூர்யாவின் வாழ்க்கையை திருப்பி போட்டவர் இயக்குனர் பாலா எனலாம். சாக்லெட் பாய் சூர்யாவை ரெக்கட் பாயாக மாற்றியவர் பாலா. நந்தா படத்தில் சூர்யா தன்னுடைய வழக்கமான நடிப்பை விட்டு முற்றிலும் மாறி ஒரு முரட்டுத்தனமான இளைஞனாக நடித்திருந்தார். அதற்கு கிடைத்த வரவேற்பு மீண்டும் இயக்குநர் கௌதம் நடிப்பில் மௌனம் பேசியதே படத்தில் மீண்டும் ஒரு முரட்டுத்தனமான ஒரு வித்தியாசமான இளைஞராக சூர்யா நடித்தார். இந்த படம் சூர்யாவுக்கு மிகப் பெரிய பெயரை பெற்று தந்தது. இதே காலக்கட்டத்தில் இயக்குநர் விக்ரமன் படத்தில் மீண்டும் ஒரு அமைதியான இளைஞராக நடித்து நடிப்பை தக்க வைத்துக்கொண்டார்.

     சூர்யாவை பட்டைத்தீட்டிய இன்னொரு படம்

    சூர்யாவை பட்டைத்தீட்டிய இன்னொரு படம்

    சூர்யாவை பட்டைத்தீட்டிய மற்றொரு படம் மீண்டும் பாலா இயக்கத்தில் வந்தது. அது பிதாமகன். விக்ரமிற்கு இணையாக குறும்புக்கார இளைஞனாக வந்து கடைசியில் உயிரிழக்கும் பாத்திரம். இடையில் சிம்ரனுடன் ஒரு குத்தாட்ட பாட்டு என கலக்கியிருப்பார் சூர்யா. இந்தப்படத்தில் நடித்த விக்ரமிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. சூர்யா அருகில் வந்து தவறவிட்டார் என்றே சொல்லலாம். 2005 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸின் பான் இந்தியா படமான கஜினியில் சூர்யா நடித்தார். அஜித் நடிக்க மறுத்த படம் சூர்யாவின் வித்தியாசமான நடிப்பால் வெற்றி படமாக அமைந்தது. அதை பின்நாளில் அமீர்கான் இந்தியில் எடுத்தார்.

     சிங்கம் சிங்கம் ஈஸ்வர சிங்கம்...

    சிங்கம் சிங்கம் ஈஸ்வர சிங்கம்...

    2010 ஆம் ஆண்டு சூர்யாவுக்கு மிக முக்கியமான ஆண்டு எனலாம் இயக்குனர் ஹரி விக்ரமுக்காக கதை எழுதிய 'சிங்கம்' படத்தில் சூர்யா நடித்தார். மிகப்பெரிய வெற்றிப்படமாக அது அமைந்தது. போலீஸ் அதிகாரியாக ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு வசனம் தமிழகம் முழுவதும் பிரபலமானது. சிங்கம் படத்தின் வெற்றி அடுத்தடுத்த சிங்கம் 2, சிங்கம் 3 என படங்கள் வெளிவந்தன. தெலுங்கு பட ரசிகர்கள் மத்தியில் சூர்யாவை கொண்டுச் சேர்த்தது இந்தப்படங்கள் தான். இதன் மூலம் மலையாளம், தெலுங்கு பட ரசிகர்களின் விருப்ப நாயகன் ஆனார் சூர்யா.

     சிறந்த நடிகர் 5 தேசிய விருதுகளை அள்ளித்தந்த சூரரைப்போற்று

    சிறந்த நடிகர் 5 தேசிய விருதுகளை அள்ளித்தந்த சூரரைப்போற்று

    கொடுமையான கொரோனா காலகட்டத்தில் சூர்யா தயாரித்து நடித்த சூரரை போற்று படம் வெளியானது. திரையரங்கில் வெளியிட முடியாத நிலையில் ஓடிடியில் படத்தை வெளியிட முடிவு செய்தார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தியேட்டர் அதிபர்கள் எச்சரித்தனர். ஆனால் வருங்கால டெக்னாலஜி இதுதான், தற்போதுள்ள நிலையில் படத்தை வெளியிட்டே தீரவேண்டும் என்கிற நிலையில் படத்தை ஓடிடியில் வெளியிட்டார். அந்தப்படம் சிறப்பாக பேசப்பட்டது. சூர்யாவுக்கு சிறந்த நடிகர் விருது உட்பட 5 தேசிய விருதுகளை இப்படம் பெற்றுத்தந்தது.

     25 ஆம் ஆண்டில் கிடைத்த அங்கிகாரம்

    25 ஆம் ஆண்டில் கிடைத்த அங்கிகாரம்

    ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையை புரட்டிப்போடும் ஒரு படம் அமையும், அப்படி சூர்யாவின் வாழ்க்கையில் ஒரு மைல் கல் படம் என்றால் ஜெய் பீம் படத்தை சொல்லலாம். சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படம், சில எதிர்ப்புகள் வந்தாலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் நீதியை சமூக அக்கறையுள்ள ஒரு வழக்கறிஞர் வாதாடி சட்டத்தின் மூலம் நியாயத்தை பெற்றுத்தரும் படம் என்பதால் சிறப்பாக பேசப்பட்டது. ஜெய் பீம் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது, ஆஸ்கருக்கு சென்றது சூர்யாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம், ஆஸ்கர் அவார்டு குழுவுக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளது 25 ஆம் ஆண்டில் கிடைத்த அங்கிகாரம் எனலாம்.

    சிவாஜி , கமல்ஹாசன் வழியில் சூர்யா ஆதிக்கம் செலுத்துவார்

    ரசிகர்களின் பேராதரவை பெற்ற சூர்யா விக்ரம் படத்தில் ரோலக்ஸாக தோன்றியது ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது, பாலாவின் இயக்கத்தில் ஒரு படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் சூர்யா தற்போது நடித்து வருகிறார். 25 ஆண்டுகளில் சூர்யாவின் வளர்ச்சி மற்ற நடிகர்களை ஒப்பிடும்போது அசுர வளர்ச்சி என்றே சொல்லலாம். சூர்யா இன்னும் பல படங்கள், பலவேடங்கள் என பல சாதனைகள் அவர் செய்ய வாய்ப்புள்ளது. செய்வார் தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசன் வழியில் கமல்ஹாசன் அவரது வழியில் சூர்யா தடம் பதிப்பார்.

    English summary
    Suriya has reached the highest level beyond those who set foot in cinema before him. For this, he has put in 25 years of hard work. Suriya's biggest recognition was when his film was selected for the Oscars and invited to the Oscars panel in the same year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X