twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விபச்சாரம்... சாய்ரா பானு, ஜோதியை கையும் களவுமாகப் பிடித்தோம்!-ஆந்திர போலீஸ்

    By Muthukrishnan
    |

    ஹைதராபாத்: நடிகைகள் சாய்ரா பானு, ஜோதி ஆகியோர் விபச்சாரத்தில் ஈடுபட்ட போது கையும் களவுமாகப் பிடித்தோம். அவர்களை வேண்டுமென்றே கைது செய்யவில்லை, என்று ஹைதராபாத் கமிஷனர் ஏகே கான் தெரிவித்தார்.

    ஹைதராபாத் நகரில் குந்தன்பாக் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரத்தில் ஈடுபட்டதாக பிரபல தெலுங்கு நடிகைகள் சைராபானு, ஜோதி மற்றும் ரஷ்ய பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

    இதுதவிர சினிமா தயாரிப்பாளர் ஜுவ்வல ராஜு, சினிமா ஆடை வடி வமைப்பாளர்கள் சந்து, வீரமணி உள்பட 6 பேர் இந்த ரெய்டில் பிடிபட்டனர்.

    இச்சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நடிகைகள் விபசார வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. நடிகைகள் மீது வேண்டுமென்ற விவபசார வழக்கு போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியது.

    கைதான நடிகைகள் இருவரும் தாங்கள் விபசாரத்தில் ஈடுபடவில்லை, நிரபராதிகள் என்று கண்ணீர் வடித்தனர்.

    இதுபற்றி ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் நிருபர்களிடம் அளித்த விளக்கம்:

    'கோகைன்' போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரிய வாலிபர் பிடிபட்டார். அவரிடம் நாங்கள் விசாரித்தபோது 65 நடிகர்- நடிகைகளுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நடிகர்-நடிகைகளை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் ஒவ்வொரு வரையும் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    இதேபோல் நடிகை சைராபானுவை ஒரு போலீஸ்படை தீவிரமாக கண்காணித்து வந்தது. அப்போது அவர் குந்தன்பாக் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு சென்றார். அவரை போலீசார் 'மப்டி' உடையில் பின்தொடர்ந்து சென்றனர்.

    அப்போது அந்த அறையில் நடிகை ஜோதி, ரஷ்ய பெண் உள்பட 8 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் போதை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்று கருதித்தான் முற்றுகையிட்டனர். ஆனால் அங்கு விபசாரம் நடப்பது தெரிய வந்தது. உடனே அவர்களை கையும் களவுமாக கைது செய்தனர்.

    அந்த நடிகைகள் விபசாரத்தில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அதை நாங்கள் நடிகர் சங்க நிர்வாகிகளிடம் காட்ட தயாராக உள்ளோம்.

    நடிகைகள் மீது எங்களுக்கு எந்தவித விரோதமும் இல்லை. போதைப் பொருள் கண்காணிப்பில் இருந்த போது அவர்கள் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்துள்ளோம்...," என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X