கனகா வழக்கில் ஆவி அமுதாவுக்கு முன்ஜாமீன்!

ஆவி அமுதா அடியாட்களை வைத்து தொலைப்பேசிய மூலம் தன்னை மிரட்டுவதாக கடந்த 9ஆம் தேதி சென்னை அபிராமபுரம் காவல்நிலையத்தில் கனகா புகார் கொடுத்தார்.
இதன்பேரில், அமுதா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார். இந்த விசாரணையில் கண்டுள்ள உண்மைகளின்அடிப்படையில், ஆவி அமுதா கைதாகும் நிலை ஏற்பட்டது.
உடனே முன் அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கனகாவுக்கு எதிராக ஏற்கனவே அவதூறு வழக்கு தொடரப்பட்டிருப்பதால், வேண்டுமென்றே அவர் பொய் புகார் கூறியுள்ளதாக ஆவி அமுதா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தேவைப்படும் போது விசாரணைக்கு வர வேண்டும் என்று ஆவி அமுதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கினார். மேலும் 3 ஆயிரம் ரூபாய்க்கு இருநபர் ஜாமீன் அளிக்கவும் உத்தரவிட்டார்.
இதனிடையே ஆவி அமுதா தொடர்ந்த அவதூறு வழக்கு குறித்து கனகா வரும் மே மாதம் 7ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











