விஷாலுக்கு ஒத்துழைப்பு இல்லை-விநியோகஸ்தர்கள் போர்க்கொடி

தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு கூட்டம் சென்னை பிலிம் சேம்பரில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில், கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், "நடிகர் விஷால் சம்பந்தப்பட்ட ஜி.கே.பிலிம்ஸ் கார்ப்பரேஷன், தமிழ்நாடு முழுவதும் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு தரவேண்டிய பாக்கி தொகையை பலமுறை கேட்டும் தரவில்லை. எனவே, பாக்கி தொகை தரும்வரை விஷால் நடித்த படங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று முடிவு செய்து இருக்கிறோம்...", என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் அதன் தலைவர் பாலாஜி, செயலாளர் ஜோசப் பிரான்சிஸ், ஆனந்தா எல்.சுரேஷ் மற்றும் ஏராளமான விநியோகஸ்தர்கள் கலந்துகொண்டார்கள்.
Comments
actor vishal தடை நடிகர் விஷால் பழைய பாக்கி விநியோகஸ்தர்கள் ban distributors g k film corporation old dues


Click it and Unblock the Notifications