போதை மருந்து கும்பலிடம் த்ரிஷா நண்பரின் செல்போன் எண்?

By Sudha

Trisha with Sladen
ஹைதராபாத்: ஆந்திர போதை மருந்து கடத்தல் கும்பலிடம் நடிகை த்ரிஷாவின் நண்பர் சிட்னி ஸ்லேடனின் செல்போன் எண்ணும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பதறிப் போன த்ரிஷா, ஹைதராபாத் கமிஷனர் ஏ கே கானைத் தொடர்பு கொண்டு, 'என்னிடம் விசாரணை நடத்தப்போவதாக வரும் செய்திகள் உண்மைதானா? எனக்கெதிராக என்ன ஆதாரம் இருக்கிறது?', என்று கேட்டுள்ளார்.

சமீபத்தில் ஹைதராபாதில் கைது செய்யப்பட்ட போதை மருந்து கும்பலுக்கும் நடிகை த்ரிஷாவுக்கும் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

போதை மருந்து சப்ளை செய்த நைஜீரிய இளைஞனிடம் த்ரிஷாவின் செல்போண் நம்பர் இருந்துள்ளது. அதே போல, போதை மருந்து வாங்கி கடத்திய நபர் ஒருவரிடமும் த்ரிஷா செல்போன் எண் உள்ளதாக போலீசாரை மேற்கோள் காட்டி ஆந்திர பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் பிரபல பேஷன் டிசைனரும் த்ரிஷா மற்றும் அவரது அம்மாவின் மிக நெருங்கிய நண்பருமான சிட்னி ஸ்லேடனின் செல்போன் நம்பரும் போதா மருந்து கடத்தல் கும்பலிடம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் வெளியான கையோடு, ஹைதராபாத் கமிஷனரைத் தொடர்பு கொண்ட த்ரிஷா, வேண்டுமென்றே தன் பெயரை கெடுக்க சிலர் சதி செய்வதாகக் கூறியுள்ளார்.

மேலும், "உண்மையில் என் நம்பர் இருந்ததா? என்னிடம் விசாரிக்கப் போகிறீர்களா? என் நண்பர் பாவம்... அவருக்கு ஒன்றும் தெரியாது. தேவையில்லாமல் புரளியைக் கிளப்புகிறார்கள்... நீங்கள் தடுக்க மாட்டீர்களா?" என்று உருக்கத்துடன் பேசியதாக தெலுங்கு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

த்ரிஷாவின் உருக்கம் கான் மனதைக் கரைக்குமா? பார்க்கலாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X