நெல்லையில் ராவணன் உள்பட 50 புதுப்பட சி.டி.க்கள் பறிமுதல்: ஒருவர் கைது

By Sudha

Aishwarya Rai and Vikram
நெல்லை: நெல்லையில் ராவணன் உள்ளிட்ட 50 புதுப்பட சி.டி.க்கள் வைத்திருந்த மதுரை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாநகர பகுதிகளில் ஆபாச சி.டி.க்கள் மற்றும் புதிய திரைப்பட திருட்டு சி.டி.க்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து டவுன் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று கூலக்கடை பஜார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரை பிடித்து அவர் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்தனர்.

அதில் கோரிப்பாளையம், அங்காடி தெரு, மிளகா, ராவணன் உள்ளிட்ட 50 புதிய திரைப்பட சி.டி.க்கள், 20 ஆபாச சி.டி.க்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சீனிவாசனை கைது செய்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X