ஜெகன் மோகன் ரெட்டி நிச்சயம் முதல்வராவார்! - நடிகை ரோஜா

By Chakra

Roja
ஹைதராபாத்: ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநில முதல்வராவது உறுதி என, நடிகை ரோஜா கூறினார்.

ஹைத்ராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் தெலுங்குதேசம் மகளிர் அணி தலைவியாக இருந்தபோது அக்கட்சியின் வளர்ச்சிக்கு எவ்வளவோ பாடுபட்டேன். பல்வேறு போராட்டங்களை முன்நின்று நடத்தினேன்.

ஆனாலும் எனக்கு அக்கட்சி தலைமையிடம் உரிய மரியாதை கிடைக்கவில்லை. என்னை ஒழித்துக் கட்டுவதில்தான் குறியாக இருந்தனர். இதனால்தான் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தேன்.

ஆந்திராவின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் ராஜசேகர ரெட்டி. அவருக்கு அடுத்து மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டிதான். அவரால்தான் ஆந்திராவை வளர்ச்சி அடைய செய்ய முடியும். இதனால் நான் அவரை தொடர்ந்து ஆதரிப்பேன். அவர் ஆறுதல் யாத்திரை நடத்துவதில் தவற இல்லை.

ஆந்திராவில் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. அவரின் கீழ் பணியாற்ற என்னைப் போன்ற கோடிக்கணக்கான தொண்டர்கள் தயாராக உள்ளனர்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X