எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் சேரணுமா?
சென்னை: தமிழக அரசின் எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரியில் நடிப்பு, ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் தொடர்பான பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
சென்னை தரமணியில் உள்ளது எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரி. இங்கு திரைப்பட இயக்கம், ஒளிப்பதிவு, பிராசசிங், ஒலிப்பதிவு மற்றும் சவுண்ட் என்ஜினீயரிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டயப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
திரைப்பட இயக்கம் படிப்பில் சேர ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அவசியம். மற்ற படிப்புகளில் சேர பிளஸ்-2 கல்வித் தகுதி போதும். 2010-2011-ம் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று (புதன்கிழமை) முதல் வழங்கப்படுகின்றன.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அடுத்த மாதம் (ஜுன்) 15-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மாணவர் சேர்க்கை, கல்வித் தகுதி தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044- 22542212 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











