ஆசின் வீட்டில் அடித்து உதைப்பதாக முத்துக்குமார் போன் மூலம் தகவல்

By Staff

Asin with Nalla Muthu Kumar
சென்னை: நடிகை ஆசின் வீட்டில் தன்னை அடைத்து வைத்து அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாக கூறி காணாமல் போயுள்ள அவரது உதவியாளர் நல்லமுத்துக்குமார் சில பத்திரிகை அலுவலகங்களுக்கு போன் செய்து கதறி அழுததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் முத்துக்குமார் - ஆசின் விவகாரத்தில் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.

ஆசினிடம் டச் அப் உதவியாளராக இருந்தவர் நல்லமுத்துக்குமார். இவரை திடீரென காணவில்லை. இதுகுறித்து அவரது தாயார் சுடலை வடிவு போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நல்லமுத்துக்குமாரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மும்பைக்கும் ஒரு படை சென்றுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் ஒளிந்திருக்கிறார், தூத்துக்குடியில் பதுங்கியிருக்கிறார் என நல்லமுத்துக்குமார் குறித்து தகவல்கள் வெளியாகின.

ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் புட்டபர்த்தியில் இருப்பதாகவும் விரைவில் வருவதாகவும் போலீஸாருக்கு நல்லமுத்துக்குமாரே போன் செய்து கூறியுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

இன்று காலை போன் மூலம் பொன்னேரி போலீஸைத் தொடர்பு கொண்டு முத்துக்குமார் பேசியதாக கூறப்படுகிறது.

ஆசின் வீட்டில் அடி, உதை, சித்திரவதை ...

அதேசமயம், நேற்று சில பத்திரிக்கையாளர்களுக்கு முத்துக்குமார் போன் மூலம் பேசியுள்ளார். அப்போது அழுத குரலி்ல் அவர் கூறுகையில், அசின் வீட்டில் என்னை அடைத்து வைத்துள்ளனர். ஆள் வைத்து தினமும் அடிக்கிறார்கள்.

இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தற்போது ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். என்னோடு பாதுகாப்புக்கு இரண்டு முரட்டு ஆசாமிகள் வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியாமல் பாத்ரூமில் இருந்து பேசுகிறேன்.

கேரளாவுக்கு என்னை அழைத்து போவதாக பேசிக் கொள்கிறார்கள். என்னை காப்பாற்றுங்கள் என்று கூறியபடி கதறி அழுததாக அந்தத் தகவல் கூறுகிறது.

இதில் எது உண்மை, முத்துக்குமார் உண்மையில் எங்குதான் உள்ளார் என்பது தொடர்ந்து புதிராகவே உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X