twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நித்தியானந்தா நடத்திய பெளர்ணமி பூஜை-மீண்டும் டிவி நடிகை மாளவிகா பங்கேற்பு

    By Chakra
    |

    Malavika TV Actress
    பெங்களூர்: சாமியார் நித்தியானந்தா நடத்திய பெளர்ணமி பூஜையில், பெங்களூரைச் சேர்நத் டிவி நடிகை மாளவிகா தனது கணவர், குழந்தையுடன் கலந்து கொண்டார். பக்திப் பரவசத்துடன் அவர் பூஜையில் பங்கேற்றார்.

    நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்க வேலைகளில் ஈடுபட்டு வீடியோவில் சிக்கி தலைமறைவானவர் நித்தியானந்தா. அதேபோல ரஞ்சிதாவும் தலைமறைவானார். இமாச்சலப் பிரதேசத்தில் பதுங்கியிருந்த நித்தியானந்தாவை போலீஸார் பிடித்து வந்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.

    பிடுதியில் உள்ள தனது ஆசிரமத்தில் மீண்டும் போதனைகள், பூஜைகள் என பிசியாகியுள்ளார். சமீபத்தில் அங்கு உரை நிகழ்த்தினார். இந்த நிலையில் நேற்று பெளர்ணமி பூஜையை நடத்தினார்.

    இதையொட்டி, நித்தியானந்தா அதிகாலை 5 மணிக்கு அக்னி வளையத்துக்குள் பஞ்ச தபஸ் யாகம் செய்தார். இதையடுத்து நித்யானந்தா பல்லக்கில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசம் அடைந்தனர். அவர்களில் டிவி நடிகை மாளவிகாவும் ஒருவர். இவர் குப்பி படத்தில் நடித்தவர். பெங்களூரைச் சேர்ந்த இவர் கே.பாலச்சந்தர் இயக்கிய அண்ணி தொலைக்காட்சித் தொடரில் அண்ணி வேடத்தில் நடித்து தமிழகத்திலும் பிரபலமானவர். தமிழிலும் ராதிகா தயாரிக்கும் சீரியல் உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார்.

    இவர் நித்தியானந்தா சிறையிலிருந்து பெயிலில் வந்த பின்னர் நடத்திய முதல் போதனையின்போது கலந்து கொண்டார். நித்தியானந்தா காலில் விழுந்தும் ஆசி பெற்றார்.

    அதேபோல நேற்று நடந்த பூஜைக்கும் அவர் வந்திருந்தார். அவருடன் கணவர் அவினாஷ், குழந்தையும் வந்திருந்தனர். அவினாஷும் கன்னடப் படங்கள், சீரியல்களில் நடித்துள்ளார். சந்திரமுகி படத்தில் பேயை விரட்ட வரும் மந்திரவாதியாக வந்தவர் இவரேதான்.

    நேற்று கணவர், குழந்தை சமேதராக மாளவிகா நித்தியானந்தாவை வணங்கி ஆசி பெற்று மகிழ்ந்தார்.

    தான் சிறையில் கழித்த வாழ்க்கையை நேற்றைய கூட்டத்தின்போது பக்தர்களிடம் பகிர்ந்து கொண்டார் நித்தியானந்தா.

    அவர் கூறுகையில்,

    ராமநகர் சிறையில் இருந்தபோது, நிறைய கைதிகள் என்னிடம் ஆசிபெற வந்தனர். அப்போது ஒரு கைதி எனது காலை தொட்டு வணங்கியபடி தனக்கு எப்போது ஜாமீன் கிடைக்கும் என்று கேட்டார். அப்போது நானும் அதற்காக தான் காத்திருக்கிறேன் என்றேன். ஆனாலும் ஒரு வாரத்துக்குள் உங்களுக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று கூறினேன். அதன்படி அவருக்கும் ஜாமீன் கிடைத்து விட்டது.

    அப்போது அவர் வந்து, சுவாமி எனக்கு ஜாமீன் கிடைத்து விட்டது, ஆனால் உங்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லையே என்று கூறினார். அவர் எதையும் முன்பின் பார்க்காமல் இறைவனிடம் சரண் அடைந்து விட்டதால் அவரது பிரச்சினை தீர்ந்து விட்டது.

    சமுதாயத்தில் என்னைப்பற்றி எப்படியெல்லாமோ விமர்சனம் செய்கிறார்கள். ராமகிருஷ்ண பரம்பஹம்சரையே எப்படியெல்லாமோ விமர்சனம் செய்தார்கள். அதேபோல என்னையும் அவரவர் மனதுக்கு வந்தபடி விமர்சனம் செய்கிறார்கள். இதை பற்றியெல்லாம் நாம் கவலைப்படக்கூடாது.

    அவர்களது டிக்ஷனரி (அகராதி) வேறு. நமது டிக்ஷனரி வேறு. நாம் யார் மீதும் கோபப்படக்கூடாது. நாம் அனைவரிடமும் மனிதாபிமானத்துடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றார் நித்தியானந்தா.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X