சண்டைப் பயிற்சியாளர் ராம்போ ராஜ்குமார் மரணம்
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார் ஹைதராபாத்தில் நேற்று இரவு மரணமடைந்தார்.
தமிழ், உள்பட பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார் ராம்போ ராஜ்குமார். சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்து வரும் பொல்லாதவன் தெலுங்கு ரீமேக் படத்தின் ஷூட்டிங்கில் அவர் கலந்து கொண்டிருந்தார்.
நேற்று இரவு படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பினார். அங்கு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.
49 வயதாகும் ராஜ்குமாருக்கு, கற்பகம் என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
ராஜ்குமாரின் உடல் சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது. நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்குமாரின் ஒரே மகனான நவகாந்த், தற்போது தம்பி ராமையா இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு கூடை முத்தம் படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











