வயிற்று வலி-மருத்துவமனையில் சைப் அலிகான்

நேற்று மாலை சைப் அலிகான் கடும் வயிற்று வலி காரணமாக லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணி்க்க்பட்டு வருவதாகவும், அவரது நிலை ஸ்திரமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் 2 நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டி வரும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பிலடெல்பியாவுக்கு ஷூட்டிங்குக்காக போயிருந்த சைப் அலிகான், கிறிஸ்துமஸை தனது காதலி கரீனா கபூருடன் கொண்டாடுவதற்காக ஊர் திரும்பிய நிலையில் அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது.
மருத்துவமனைக்கு சைப் அலி கான் கொண்டு வரப்பட்டபோது கரீனா மற்றும் அவரது சகோதரி கரீஷ்மா கபூர் ஆகியோரும் உடன் இருந்தனர்.


Click it and Unblock the Notifications











