விஜய்காந்துடன் சரத்குமார் மற்றும் நடிகைகள் சந்திப்பு!

அவருடன் நடிகர் சங்க நிர்வாகிகள் விஜயகுமார், நடிகைகள் நளினி, பாத்திமா பாபு உள்ளிட்டோரும் விஜயகாந்தை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்போது, நடிகர் சங்க பிரச்சினைகள், திரையுலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக சரத்குமார் உள்ளிட்டோரிடம் பேசினார் விஜயகாந்த்.
சந்திப்பு குறித்து பின்னர் பேசிய சரத்குமார், "தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றதற்காக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்துக்களைச் சொன்னோம். சங்கத்தின் மூத்த உறுப்பினர், முன்னாள் தலைவர், இப்போது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் திரையுலகப் பிரச்சினைகள் குறித்து எங்களுடன் பேசினார்," என்றார்.
நடிகர் விஜயகுமார், நடிகைகள் நளினி, பாத்திமா பாபு, பசி சத்யா ஆகியோர் விஜயகாந்துக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











