ஆந்திர வெள்ளம்-தயாரிப்பாளர்கள் ரூ. 10 லட்சம்
ஆந்திர மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ரூ. 10 லட்சம் நிதியுதவி அளிக்கிறது.
இதுகுறித்து சங்கத் தலைவர் ராம.நாராயணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பக்கத்து மாநிலமான ஆந்திராவில் சமீபத்தில் ஏற்பட்ட புயல்-வெள்ளத்தில் பெரும் உயிரிழப்பும், பொருள் இழப்பும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூ.10 லட்சம் வழங்க முடிவு செய்திருக்கிறோம்.
ஐதராபாத்தில் வருகிற 7ம் தேதி தெலுங்கு நடிகர், நடிகைகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தி புயல்-வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியின்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூ.10 லட்சம் உதவியை வழங்க முடிவு செய்திருக்கிறோம்.
தமிழ் பட உலகின் மற்ற அமைப்புகளை சேர்ந்தவர்களும் முடிந்த உதவிகளை செய்யும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











