எளிமையாக தொடங்கியது 'திருமந்திரம்'!
தென்காசி: திருமந்திரம் புதுப்படத்தின் பூஜை தென்காசி அருகே உள்ள கிராமத்தில் எளிமையாக நடைபெற்றது.
பெரும்பாலான சினிமாப் பட பூஜை மற்றும் தொடக்க விழா தடபுடலாக நடைபெறுவது வழக்கம்.
ஆனால், 'திருமந்திரம்' படத்தின் தொடக்க விழா நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ஆய்க்குடி எனும் கிராமத்தில் செயல்பட்டு வரும் மாற்று திறன் கொண்டோர் நிறுவனத்தில் உள்ள அமர்சேவா சங்க வாளகத்தில் நடைபெற்றது.
கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சரவணன் பொன்னுசாமி தயாரித்து ஹூரோவாக நடிக்கிறார்.
நடிகர் ராதாரவியின் மகன் ஹரி ராதாரவி வில்லனாக அறி்முகம் ஆகிறார். மும்பையை சேர்ந்த ஆர்யா அராரோ கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.
படத் துவக்க விழாவில் திரைப்பட நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இயக்குனர் ராமநாராயணன், வாகை சந்திரசேகர், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் உள்ளிட்ட பிரமுகர்கள் பேசினர்.
பூஜை முடிந்ததும் சரத்குமார் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ராதாரவி, சரவண பொன்னுசாமி, ஹரி ராதாரவி, கதாநாயகி ஆர்யா ஆராரோ நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
இப்படத்தில் சீதா, வாசுவிக்ரம், ஓ.ஏ.கே சுந்தர், ஓய்ஜீ மகேந்திரன், நம்பிராஜ், முத்துகாளை, சினேகா நம்பியார், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் 40 நாட்கள் நடக்கிறது. பாடல் காட்சிகள் அமெரிக்கா மற்றும் காம்போடியாவில் படமாக்கப்படுகிறது.
கவிஞர் பிறைசூடன் எழுதி தேவா இசையில் 5 பாடல்கள் இடம்பெறுகினறந.


Click it and Unblock the Notifications











