சினிமா பி.ஆர்.ஓ. சங்க புதிய நிர்வாகிகள்
தென்னிந்தியத் திரைப்பட பத்திரிக்கைத் தொடர்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு சென்னையில் நடந்தது. தலைவர் விஜயமுரளி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
தென்னிந்திய திரைப்படப் பத்திரிக்கைத் தொடர்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக விஜய முரளி தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக பெரு. துளசி.பழனிவேல் தேர்வானார். பொருளாளராக ஆதம்பாக்கம் ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார்.
இணைச் செயலாளர்களாக ஜி.பாலன், கோவிந்தராஜ், நெல்லை அழகேஷ், மேஜர்தாசன், கிளாமர் சத்யா உள்ளிட்ட 9 பேர் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக தேர்வாகினர்.
சங்கத்தின் ஆலோசகாக நிகில் முருகன் தேர்வானார்.
சங்கத்தின் தலைவர் இதுவரை இருந்து வந்த டைமண்ட் பாபு, இம்முறை போட்டியிடவில்லை. மாறாக, நிர்வாகிகள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யவும், போட்டி இல்லாமல் நிர்வாகிகத தேர்வு செய்யப்படவும் வசதியாக போட்டியிலிருந்து விலகி சுமூகமான முறையில் தேர்வு நடைபெற உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











