அதிமுக கூட்ட மேடை சரிந்தது-கீழே விழுந்தார் ராமராஜன்-தொண்டர்கள் காப்பாற்றினர்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. சிறப்பு பேச்சாளராக ராமராஜன் அழைக்கப்பட்டிருந்தார்.
அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் குமரகுரு பேசிவிட்டு அமர்ந்ததும் ராமராஜன் பேச எழுந்தார். அப்போது கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு பொன்னாடைகள் போர்த்த முன்வந்தனர். கும்பலாக எல்லோரும் மேடை ஏறியதால் பாரம் தாங்காமல் மேடை சரிந்தது.
இதனால் தடுமாறிய ராமராஜன் கீழே விழப் பார்த்தார். ஆனால் சுற்றிச் சூழ்ந்திருந்த தொண்டர்கள் தக்க சமயத்தில் பாய்ந்து ராமராஜனை தூக்கி விட்டனர்.
இந்த சம்பவத்தில் 2 தொண்டர்களுக்கு அடிபட்டு காயமடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ராமராஜனுக்கு காயம் ஏதும் இல்லை.
More from Filmibeat
actor ramarajan fell from stage மேடை சரிந்து விழுந்தார் நடிகர் ராமராஜன் ராமராஜன் விழுப்புரம் அதிமுக கூட்டம் villupuram admk meeting


Click it and Unblock the Notifications











