லாக்டவுனால் பணக்கஷ்டம்.. உதவிக் கேட்ட நடிகை பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்!

By

கொல்கத்தா: பண உதவி கேட்கச் சென்ற இளம் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

Recommended Video

V-CONNECT | ACTRESS KHUSHBOO CHAT | சுந்தர் c காதலை சொன்ன விதம் | FILMIBEAT TAMIL

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த தொற்றுக்குத் தினமும் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகி

தீவிர முயற்சி

தீவிர முயற்சி

இந்தியாவிலும் இந்த உயிர்கொல்லி வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,123 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. இருந்தும் இது வேகமாக பரவி வருகிறது.

லாக்டவுன்

லாக்டவுன்

இந்த கொரோனா காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வேலை இழந்துள்ளனர். பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. தினசரி வேலை பார்த்து சம்பாதிக்கும் தொழிலாளர்கள் கடும் கஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். பலர் பசி, பட்டினியுடன் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.

இளம் நடிகை

இளம் நடிகை

சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பெரிய ஹீரோ, ஹீரோயின்கள், டெக்னீஷியன்களைத் தவிர்த்து மற்றவர்கள் கடும் கஷ்டத்தில் உள்ளனர். பணம் இல்லாமல் அவர்கள் வாழ்க்கையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில், பண உதவி கேட்கச் சென்ற கொல்கத்தாவைச் சேர்ந்த இளம் நடிகை ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொருளாதார சிக்கல்

பொருளாதார சிக்கல்

பெங்காலி படங்களில் நடித்து வரும் 26 வயது நடிகை அவர். பிரபல மாடலும் கூட. லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு இல்லாததால் பொருளாதார சிக்கலுக்கு உள்ளானார். இதையடுத்து தனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவரிடம் கடந்த 5 ஆம் தேதி பண உதவிக் கேட்டார். அபார்ட்மென்ட் ஒன்றில் தனியாக வசித்த நடிகையின் வீட்டுக்கு வந்த அவர், அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 வீடியோ எடுத்து மிரட்டல்

வீடியோ எடுத்து மிரட்டல்

அதை வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர், இதுபற்றி போலீசில் சொன்னால், இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த நடிகை, ஜாதவ்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நடிகையின் விவரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X