26 வயதிலேயே வாழ்க்கையை முடிந்து கொண்ட மாடல் அழகி.. இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது!
சென்னை: பல பட்டங்களை வென்று இந்தியாவில் பிரபலமான இளம் மாடல் அழகியான ஷான் ராச்சல்
தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 26 வயதிலேயே அனைவரும் கொண்டாடும் மாடல் மற்றும் வழக்கறிஞருமான ஷான் ராச்சல், தற்கொலை செய்து கொள்வதற்கு முன், கடிதத்தை எழுதி வைத்துவிட்டு வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளார். அவர் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? அதற்கான காரணம் என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த, மாடல் அழகியான ஷான் ராச்சல், 1999 ஆம் ஆண்டு கரமணி குப்பம் பகுதியில் பிறந்தார். இவருக்கு 26 வயது. மாடலிங் துறையில் ஈடுபாடு கொண்ட இவர், இதில் படுபிஸியாக இருக்கிறார். இவரது முழு பெயர் சங்கர பிரியா காந்தி. இவருக்கு டார்க் குயின் என்ற செல்லப் பெயரும் உண்டு. அவரது தாய் இளம் வயதிலேயே இறந்துவிட, தந்தை காந்தி வளர்ந்து வந்துள்ளார். மேலும், மகள், ஷான் ராச்சலின் ஆசைப்படி மாடலிங் துறையில் அவர் சிறந்து விளங்க ஊக்குவித்துள்ளார். இவருக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது. மாமியார் மற்றும் கணவருடன் புதுச்சேரியில் வசித்து வந்தார்.

ஏன் தற்கொலை?: இந்நிலையில்,ஷான் ராச்சல், ஜூலை 13 ஆம் தேதி அதிகப்படியான தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். நீண்ட நேரமாக அவரின் அறையின் கதவு திறக்காததால், சந்தேகம் அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது அவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து, குடும்பத்தினர் மற்றும் அவரது தந்தை உடனடியாக புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பின், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து ஜிம்பர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன அழுத்தம்: இதைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷான் ராச்சல் வீட்டில் சோதனை செய்த போது, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், தனது தற்கொலைக்கு கணவரோ அல்லது மாமியாரோ காரணம் இல்லை. அவர்களுக்கும் என் தற்கொலைக்கு எந்த சம்பந்தமும் இல்லை என எழுதியுள்ளார். முதற்கட்ட அறிக்கையில், அவர் சில காலமாக மன அழுத்தம், பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் அதிகப்படியான கடன்களால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. ஃபேஷன் நிகழ்ச்சிகளுக்காக நிறைய பணத்தை செலவழித்து கடனாளியாகிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிஸ் டார்க் குயின்: சிறு வயது முதலே பல போராட்டங்களை சந்தித்த ஷான் ராச்சல், மாடலிங் துறையில் உள்ள குறைபாடுகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக போராடினார். குறிப்பாக, வண்ணமயமாக்கலுக்கு எதிராக அவர் போராடினார். இதன் விளைவாக, இளம் வயதிலேயே அவர் பல விமர்சனங்களையும், ஏற்ற தாழ்வுகளையும் கடந்து வந்தார். மிஸ் புதுச்சேரி 2020, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, மிஸ் வேர்ல்ட் பிளாக் பியூட்டி உள்ளிட்ட பல பட்டங்களை வென்றுள்ளார். இளம் வயதிலேயே அவர் இறந்தது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எந்தபிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல, தற்கொலை எண்ணம் தோன்றினால், www.sas.snehaindia.org என்ற இணையதளம் மூலமாகவும், [email protected] என்ற மின்னஞ்சல், 9445120050 தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.


Click it and Unblock the Notifications











