நடிகர்-இயக்குநர் பெரோஸ்கான் மரணம்

பெங்களூரைச் சேர்ந்த பெரோஸ் கான், எழுபது மற்றும் எண்பதுகளில் பாலிவுட்டில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். பல படங்களை இயக்கியும் உள்ளார்.
அவர் நடித்து இயக்கிய தர்மாத்மா, ஜான் பாஸ் படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆப்கானிஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் எனும் பெருமை தர்மாத்மாவுக்கே உண்டு. ஹாலிவுட்டின் காட்பாதர் படத்தின் தழுவல் இது.
குர்பானி திரைப்படம் வசூலில் புதிய சாதனையைப் படைத்தது. யால்கார் படத்துக்குப் பின், படங்கள் இயக்குவதை சில காலம் நிறுத்தினார். மீண்டும் 1998 முதல் தனது மகன் பர்தீன் கானை வைத்து படங்களை இயக்கித் தயாரித்தார்.
கடைசியாக 2007-ம் ஆண்டு வெல்கம் எனும் சூப்பர் ஹிட் படத்தில் நடித்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெரோஸ் கான் மும்பை மருத்துவமனையில் நீண்டகாலம் சிகிச்சைப் பெற்றார். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு சிகிச்சையால் பலனில்லை என்பதால், பெங்களூரில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கே திரும்பிவிட்டார்.
பெரோஸ்கானுக்கு லைலா கான் என்ற மகளும் உள்ளார்.
இறுதி ஊர்வலம் இன்று பெங்களூரில் நடக்கிறது. பாலிவுட் நடிகர்கள் பலரும் இதில் பங்கேற்கின்றனர்.


Click it and Unblock the Notifications











