தயாரிப்பாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கு- ஐஏஎஸ் அதிகாரிக்கு பிடிவாரண்ட்

By Sudha

காற்றுக்கென்ன வேலி படத் தயாரிப்பாளர் புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில், நேரில் ஆஜராகுமாறு ஐஏஎஸ் அதிகாரி ராஜுவைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக புகழேந்தி எழும்பூர் கோர்ட்டில் தொடர்ந்த அவதூறு வழக்கில், காற்றுக்கென்ன வேலி என்ற படத்தை கடந்த 2000 ம் ஆண்டு நான் தயாரித்தேன். ஆனால் படத்தை வெளியிட சென்சார் போர்டு சான்றிதழ் தரவில்லை.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக படம் எடுக்கப்பட்டதாக காரணம் தெரிவித்தனர். பின்னர் ஐகோர்ட்டில் வழக்கு போட்டு சமீபத்தில் படத்தை வெளியிட்டேன்.

இந்நிலையில் இந்த படத்துக்கு விடுதலைப்புலிகள் முதலீடு செய்ததாக சென்சார் போர்டின் சென்னையில் உள்ள பிராந்திய தணிக்கை அதிகாரி ராஜூ தெரிவித்துள்ளார். எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத நிலையில் பொய்யான குற்றச்சாட்டை கூறிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜூ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வழக்கு 14 வது கோர்ட்டில் நீதிபதி காஞ்சனா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய பின்னர், பலமுறை சம்மன் அனுப்பியும், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜூ ஆஜராகவில்லை என்று கூறிய நீதிபதி, . ராஜுவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X