அமீரிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவு

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி தமிழ்நாடு திரைப்பட துறையினர் சார்பில் பேரணி நடந்தது. இதை தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் இயக்குனர்கள் அமீர் மற்றும் சீமான் இருவரும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட விடுதலை புலிகளுக்க ஆதரவாகவும் பேசியதாக கூறி கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து ராமநாதபுரம் போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் விசாரணை முடியும் வரை வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரது பாஸ்போர்ட்டும் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் இயக்குனர் அமீர் தனது பாஸ்போர்ட்டை தனக்கு திரும்ப அளிக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பாஸ்போர்ட்டை திரும்ப பெற்று கொள்ளுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று அமீர் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகுமார் முன்னிலையில் ஆஜரானார். நீதிமன்றத்தில் அமீரின் வக்கீல்கள் கருணாகரன் மற்றும் அக்பர் அலி ஆகியோர் வாதாடினர். இதையடுத்து நீதிபதி பாஸ்போர்ட்டை அமீரிடம் கொடுக்குமாறு உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











