ஆந்திர நடிகர்கள் படத்தை பார்க்க கூடாது: தெலுங்கானா தலைவர் தடை

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அவ்வப்போது உச்சகட்டத்துக்குப் போவதும் தணிவதுமாக இழுபறிப் போராட்டமாகிவிட்டது தெலுங்கானா விவகாரம்.
இந்நிலையில், தெலுங்கானா கூட்டமைப்பு தலைவர் கோதண்டராம் ரெட்டி கல்லூரி மாணவர்களிடம் பேசும் போது கூறியதாவது:
தெலுங்கானா மாணவர்கள் சிரஞ்சீவி, அவரது சகோதரர் பவன் கல்யாண், மகன் ராம்சரன் தேஜா, மற்றும் மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., நாகார்ஜுனா, வெங்கடேஷ் போன்ற ஆந்திர நடிகர்கள் நடிக்கும் படங்களை பார்க்க கூடாது. மாணவர்கள் ஆதரவு இல்லாவிட்டாலே அவர்கள் ப்யூஸ் போன பல்பாகிவிடுவார்கள். ஒற்றுமை என்ற பெயரில் நமது ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.
இதே போல் ஆந்திர பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க கூடாது. அவர்களது கடைகளில் பொருள் வாங்குவதையும் இதன் மூலம் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படும். நாம் யார் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்," என்றார்.


Click it and Unblock the Notifications











