தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்!-சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு

By Shankar

SA Chandrasekaran
சென்னை: தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

எஸ் ஏ சந்திரசேகரன் புதிய தலைவராகப் பதவி ஏற்றதை எதிர்த்து, சிட்டி சிவில் கோர்ட்டில் சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான ஜி.பாபுகணேஷ் (வயது 42) தாக்கல் செய்த மனுவில், "நான் பாலவிக்னேஷ் கிரியேஷன்ஸ் என்ற சினிமா நிறுவனம் நடத்தி வருகிறேன். இதுவரை 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து இருக்கிறேன். இந்த சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். இந்த சங்கத்தின் தலைவராக ராம நாராயணன் செயல்பட்டு வந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவர் சார்ந்த கட்சி தோல்வி அடைந்ததும் அந்தப் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

அவரோடு வேறு சில நிர்வாகிகளும் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் சங்க நிர்வாகத்தில் பெரிய குழப்பம் ஏற்பட்டது. எனவே சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட விதம் முற்றிலும் விதிமுறைகளுக்கு முரணானது.

கலைக்க வேண்டும்

சங்க விதி 15(பி)-யின்படி, தற்காலிக தலைவர் பதவி நியமனத்துக்கு முன்பாக பொதுக்குழு கூட்டப்பட்டு தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு நிர்வாகக் குழுவை மட்டும் கூட்டி தற்காலிக தலைவரை தேர்வு செய்துள்ளனர். அப்படி தேர்வு செய்யப்படும் தலைவர் உடனடியாக பொதுக்குழுவை கூட்டி ஏற்கனவே உள்ள குழுவை கலைத்துவிட்டு தற்காலிக குழுவை ஏற்படுத்த வேண்டும்.

அதன்மூலம் பழைய குழுவினரின் தவறுகளை கண்டறிந்து புதிய தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். ஆனால் தற்போதைய தலைவர் அதைச் செய்யவில்லை. மாறாக, மீண்டும் விதிமுறைகளுக்கு மாறாக நிர்வாகக் குழுவை கூட்டியுள்ளார். இதுபோன்ற செயல்பாடுகளை எதிர்த்து கூறப்பட்ட கருத்துகளை அவர் ஏற்கவில்லை.

முறைகேட்டுக்கு வாய்ப்பு

முன்னாள் தலைவர் ராம நாராயணன் மீது கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பெரிய தயாரிப்பாளர்களின் ஆதிக்கம்தான் சங்கத்தில் மேலோங்கி இருக்கிறதே தவிர, நடுத்தர, சிறிய சினிமா தயாரிப்பாளர்களின் குரல் எதுவும் அங்கு எடுபடவில்லை.

சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கையில் முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே கடந்த 5 ஆண்டுகால உறுப்பினர் பட்டியலை வெளியிட வேண்டும். சங்கத்தின் கணக்குகளை உறுப்பினர்களுக்கு தரவில்லை. சங்கத்தின் பல திட்டங்களுக்கான நிதிக்கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதுபோன்ற சில அடிப்படை கோளாறுகளை சரி செய்த பிறகு நடத்தப்படும் தேர்தல் அர்த்தமுள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால் சங்கத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகளை மீண்டும் செய்ய வாய்ப்பு ஏற்படும்.

நிர்வாகிகளுக்குத் தடை

ஆனால் இதுபற்றி கூறிய கருத்துகளை ஏற்காமல் பொதுக் குழுவை கூட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சங்கத் தேர்தல் அறிவிக்கப்படக் கூடும். எனவே இந்த சங்கத்தின் தற்காலிக தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், முன்னாள் தலைவர் ராம நாராயணன் மற்றும் கே.பிரபாகரன், எல்.எம்.எம்.முரளிதரன், காஜா மொய்தீன் ஆகியோரை சங்க நடவடிக்கைகளில் மேலும் செயல்படாதபடி தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்", என்று கூறியிருந்தார்.

தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவு

இந்த மனுவை சிட்டி சிவில் கோர்ட்டின் கோடை விடுமுறை கால நீதிபதி விசாரித்து வழக்கு விசாரணையை ஜுன் 17-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். அதுவரை சங்க நிர்வாகத்தில் இரண்டு தரப்பினரும் தற்போதைய நிலை நீடிக்கும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். ஜுன் 17-ந் தேதியன்று பிரதிவாதிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X