கற்பழிப்பு வழக்கில் நடிகை கைது

இதுகுறித்து மும்பை, மீரா சாலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாரத் ஜாதவ் கூறுகையில், தானே மாவட்டம் பாயாந்தர் பகுதியில் ஹூமா கானின் வீடு உள்ளது. இங்கு 12 வயது சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்தார்.
அவரை, ஹூமா கானும், அவரது தம்பி சமீரும், புனேவுக்குக் கொண்டு சென்றனர். அங்கு வேலைக்காரச் சிறுமியை, சமீர் கற்பழித்துள்ளார். இதற்கு ஹூமா கான் உடந்தையாக இருந்துள்ளார்.
இதையடுத்து கற்பழிப்பு, கொலை முயற்சி, கடத்தல், குற்றத்துக்கு உடந்தையாக இருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஹூமா கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications